Thursday, May 9, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (43)


தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள் (43)
























இராமா உன்னை
குறை கூற வாய் ஏது?

அனவரதமும் பாவச்செயல்கள்
 புரிந்துகொண்டிருக்குமென் போன்றவர்களுக்கு
 உன்னை குறை கூற வாய் ஏது ?

காமம்,குரோதம்,லோபம்,மதம்,மோகம் ,மாச்சர்யம் ஆகிய ஆறு சத்ருக்கள் தங்களுக்கு வசப்படாமல் பருவ மங்கையர்களைப் பார்த்து ,பற்களை இளித்து சீதாநாயகனாகிய இராமபிரானின்  உண்மையான பக்தியை அறியாத மற்றவர்களுக்கும் உன்னை குறை கூற வாய் ஏது?

(கீர்த்தனை-(398)-நோரெமி ஸ்ரீராம-ராகம்-வராளி-தளம்-ஆதி)

இந்த உலகில் மக்கள்
எதற்கெடுத்தாலும் இறைவன் மீதே 
குற்றம் சுமத்துகின்றனர்.

அவர்கள் செய்யும் தவறுகளால் 
துன்பம் அடைந்தாலும் அதற்கும் 
இறைவன் மீதே குற்றம் சுமத்துவதே 
அனைவருக்கும் வாடிக்கையாகிவிட்டது

அவர்களின் தவற்றை உணர்ந்து 
திருந்துவதே கிடையாது.

இதற்க்கு காரணம் நம்முள்ளேயே இருந்துகொண்டு நம்மை ஆட்டி படைக்கும் கூடவே இருந்து கொல்லும் நோய் போல ,மறைந்திருந்து தாக்கும் எதிரிபோல இருக்கும் ஆசைகள் என்ற காமம்,கவர்ச்சி,ஈர்ப்பு என்ற மோகம்,

நம்மை தாக்கி பிறரையும் தாக்கி நம்மை படுகுழியில் தள்ளும் சினம் என்னும் குரோதம் ,

எந்த பொருளையும் தனக்கும் பயன்படாது பிறருக்கும் பயன்படாது நம்மை செய்யும் கருமித்தனம் என்னும் லோபம்,

சிறிது காலமே மட்டும் இருந்து அழிந்து போகும் உடல்,மற்றும் பொருட்கள் மீது கவர்ச்சியை ஏற்படுத்தி நம்மை அதில் மூழ்கசெய்து  நம்மை மீளா நரகத்தில் தள்ளும் மோகம் என்னும் மோசமான குணம்

பிறர் மீது ஆதிக்கம் செலுத்தி பிறரை துன்புறுத்தி நம்மை மீளாநரகத்தில் தள்ளும் மதம் என்னும் குணம்

நம்மை எப்போதும் துன்புறுத்திக் கொண்டு நம்மையும் நம்மை சார்ந்தவர்களின்  நிம்மதியைக் கெடுக்கும் பொறாமை என்னும் மாத்சர்யம்

ஆகிய ஆறு தீய குணங்களால் பீடிக்கப்பட்டிருக்கும் நம் போன்றவர்களுக்கு ஸ்ரீராமபிரானின் மகிமை எப்படி புரியும்?

இந்த நிலையில் இறைவன் மீது குறை சொல்ல நமக்கு வாய் ஏது என்கிறார் சுவாமிகள்.

நாம் நம்மை திருத்திக்கொள்ளுவோம் அதற்க்கு அவன் திருவடிகளை நாடுவோம்.




3 comments:

  1. ///நாம் நம்மை திருத்திக்கொள்ளுவோம்...///

    சிறப்பான விளக்கத்திற்கு நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

  2. //[பட்டாபி] இராமா உன்னை குறை கூற வாய் ஏது?//

    சிறப்பான ஆக்கம். அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஏன் இல்லை ?

      ஏராளமான பேர்கள் இருக்கிறார்கள்.

      எவ்வளவு போட்டு நசுக்கினாலும்
      இவன் எப்படி நிமிர்ந்து நிற்கிறான் என்று
      என் மீது பொறாமைப்பட்டு
      நாக்கிலிருந்து நஞ்சைக் கக்குகிறார்கள்.பலர்

      சிலர் நேருக்கு நேராக அதை செய்கிறார்கள்

      சிலர் என்னை சேர்ந்தவர்கள் மூலம்
      அந்த கயிங்கர்யத்தை செய்கிறார்கள்.

      சிலர். அதை மறைமுகமாக
      தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்

      இவனுக்கு பொறாமை கிடையாது.
      அதனால் அது என்னை துன்புறுத்தும் தாபம் கிடையாது.

      ஆனால் அவர்களுக்கு தெரியாது
      இவன் ஆலகால நஞ்சையே உண்டு ஜீரணித்த
      அந்த சிவபெருமானின் பக்தன் என்று.

      ஆனால் அவர்களுக்கு இதுவும் தெரியும்
      இவன் அந்த சிவபெருமானே
      அன்பு பாராட்டும் இராம பக்தன் என்று.

      அந்த ராம நாமம்தான் என்னை எல்லா இடர்களிடமிருந்தும்கசடர்களிடமிருந்தும்
      காப்பாற்றி என்னை உயிரோடுஇந்த உலகில்
      உலவ விட்டுக்கொண்டிருக்கிறது என்பதை
      நான் மனப்பூர்வமாக உணர்ந்துள்ளேன்,

      என்னை வசை பாடுபவர்கள்
      இருக்கத்தான் செய்கிறார்கள்

      பகவான்தான் அவர்களுக்கு
      நல்ல புத்தியை கொடுக்கவேண்டும்.
      நாம் என்ன செய்ய முடியும்?

      அதைப்பற்றிஎல்லாம்நினைக்க
      இவனுக்கு ஏது நேரம்?

      இவன் இவனுக்கென ஒரு பாதையை
      வகுத்துக்கொண்டு அதில்
      சென்று கொண்டிருக்கிறான்

      அதில் உங்களை போல்
      வாழ்த்தும் ஒன்றிரண்டு
      நல்ல உள்ளங்களின் ஆசியோடு

      Delete