Wednesday, May 15, 2013
ஆன்மீக சாதனைகள்
ஆன்மீக சாதனைகள்
கேள்வி: நான் பல ஆண்டுகளாக
பலவிதமான ஆன்மீக சாதனைகள் செய்தும்
எந்த முன்னேற்றமும் இல்லை.
சில நேரங்களில் இவையெல்லாம்
வீண் செயலோ என்று தோன்றுகிறது.
இவைகளையெல்லாம் விட்டுவிட்டு
இந்த உலக இன்பங்களில் மூழ்கிவிடலாம்
போன்று தோன்றுகிறது.
இருந்தாலும் அதற்கும்
மனம் ஒப்பமாட்டேன் என்கிறது.
மனம் அலைபாய்ந்து என்னை குழப்புகிறது.
மனதில் நிரந்தரமான
அமைதி ஏற்பட என்ன செய்ய வேண்டும்.
பதில்: இந்த நிலை எல்லா சாதகர்களுக்கும்
பல கால கட்டங்களில் ஏற்படும்.
அவைகளெல்லாம் இறைவன்
அவனுக்கு வைக்கும் சோதனைகள்.
நல்ல அடித்தளமில்லாமல் கட்டப்படும் கட்டிடம்
ஆட்டம் கண்டு அழிந்து போகும்.
எனவே சுயலமற்று அமைந்த
நல்ல எண்ணங்களின் அடிப்படையில் வளரும்
ஆன்மீகம்தாம் ஒரு பக்தனை
உண்மை பொருளை நோக்கி இட்டு செல்லும்.
அவ்வாறில்லாது அகந்தை பொருட்டு
பிறரை ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் சென்று
பெறும் பலனெல்லாம் அழிவிற்குதான்
கொண்டு செல்லும்.
எப்படி என்றால் பலன்களை கோரி
பிறரை அடக்கி ஆள நினைத்து
பல வரங்களை பெற்ற அசுரர்கள் பிறரை
துன்புறுத்தி அவர்களும் கோர மரணத்தை
அடைந்ததுடன் அவர்கள் செய்த சாதனைகளும்
விழலுக்கு இறைத்த நீராகி போயின
என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
எனவேதான் இறைவனை அடையவேண்டும்
அவனை உணரவேண்டும் என்ற
ஒரே நோக்கத்துடன் மட்டுமே
அவனை உபாசனை செய்யவேண்டும்.
மற்றபடி உலகபோகங்களை வேண்டியோ
அதிகாரம் வேண்டியோ அவனை உபாசிக்கக்கூடாது.
இறைவன் அவைகளை
நமக்கு தருவானாயினும் அது சாதகர்களுக்கு
அழிவைத்தான் தரும். என்பதை.
உணர்ந்து கொள்ளவேண்டும்.
எனவே இறைவன் நமக்கு தரும்
சோதனைகளும் தடைகளும் நம்மை புனிதமாக்கி
அவன் திருவடிகளில் சேர்த்துக்கொள்வதற்கு
அவன் நம் மீது காட்டும் கருணையே
என்று அறிந்துகொண்டு அவன் திருவடிகளில்
இன்னும் தீவிரமாக பக்தி செலுத்தவேண்டும்.
அவ்வாறு செய்தோமானால்
நம் வெற்றி உறுதி.
பாதிப்புகளை மட்டுமே எண்ணி எண்ணி
மனம் சோர்ந்துபோகாமல் அதற்காக
வீணடிக்கும் சக்தியை
இறைவனைநோக்கி திருப்ப வேண்டும்
இறைவனால் முடியாதது
எதுவுமில்லை.
அவன் உளதை இலதாக்குவான்.
இல்லாததை உளதாக்குவான்
அவன் நினைக்கும் கணமே
மலை மடுவாகும்,
மடு மலையாகும். .
ஆனால் மனிதர்களுக்கு
அவன் மீது உண்மையான
நம்பிக்கை இருப்பதில்லை.
அவர்கள் உள்ளம்
தேனிரும்பு போல் இருக்கிறது .
நெருப்பில் இருக்கும்போது
நெருப்பாக ஒளிவிடுகிறது.
அகன்றதும் மீண்டும்
துருப்பிடிக்கும் இரும்பாகி
அழிந்தே போய்விடுகிறது.
எப்போதும் அவன்
நினைவாகவே இருந்தால்
என்றும் ஒளிவீசலாம்
அவனோடு சேர்ந்துகொண்டு.
ஆனால் அதற்கு மனிதர்களிடம்
பொறுமையும்,நம்பிக்கையும் வருவதில்லை.
வந்தாலும் அந்த நம்பிக்கை
நீண்ட நேரம் நிலைத்து நிற்பதில்லை.
அதனால்தான் பல ஆண்டுகள்
ஆன்மீக சாதனைகள் செய்தாலும்
ஓட்டையுள்ள பானையில்
உள்ள நீர் சிறிது சிறிதாக
கசிந்து கொண்டிருப்பதுபோல்
பலன் ஏதும் ஏற்படுவதில்லை.
தகுந்த குருவை அடைந்து
அந்த ஓட்டையை கண்டறிந்து
அதை அடைத்தால்தான் நம் மனம்
இறைவனின் நாமத்தால் நிரம்பி
நம்முடைய சாதனை வெற்றிபெறும்.
Pic. courtesy-google images
Subscribe to:
Post Comments (Atom)
/// பாதிப்புகளை மட்டுமே எண்ணி எண்ணி மனம் சோர்ந்துபோகாமல் அதற்காக வீணடிக்கும் சக்தியை
ReplyDeleteஇறைவனைநோக்கி திருப்ப வேண்டும்... ///
அருமையாகச் சொன்னீர்கள் ஐயா... நன்றி...
இந்த வரிகள் எல்லாவற்றிற்கும்
Deleteஎல்லோருக்கும் பொருந்தும்.
நன்றி DD
//அவர்கள் உள்ளம் தேனிரும்பு போல் இருக்கிறது . நெருப்பில் இருக்கும்போது
ReplyDeleteநெருப்பாக ஒளிவிடுகிறது.அகன்றதும் மீண்டும் துருப்பிடிக்கும் இரும்பாகி
அழிந்தே போய்விடுகிறது.//
நல்லதொரு உதாரணம்.
//தகுந்த குருவை அடைந்து அந்த ஓட்டையை கண்டறிந்து அதை அடைத்தால்தான் நம் மனம் இறைவனின் நாமத்தால் நிரம்பி நம்முடைய சாதனை வெற்றிபெறும். //
தகுந்த குரு ????? கிடைக்க எங்கே போவது ?????
ஆண்டவா ! இவரும் தினமும் ஏதேதோ சொல்லி என்னைக் குழப்ப ஆரம்பித்து விட்டார்.
ஏற்கனவே நான் மிகவும் குழம்பிப்போய் உள்ளேன். தெளிவு கிடைக்கச்செய்வாயாக !.
எங்கேயும் போகவேண்டாம்
Deleteஉங்களுக்குள்ளேயே
இருக்கிறார் குருநாதன்
அவரிடம் செல்லுங்கள்
அவர் உங்களின் குருநாதரை
உங்களுக்கு அடையாளம் காட்டுவார்.
ஆனால் உங்கள் மனம் எங்கெல்லாம்
சென்றுகொண்டிருக்கிறது என்பது
உங்களுக்கே தெரியும்.
சிறிது காலம் அவைகளை
உங்கள் மனதின் உள்ளே
செல்ல அனு(மதிக்காதீர்கள் )
பேச்சை குறையுங்கள்
.நீங்கள் வீணாக்கும்
மூச்சும் குறையும்
உணவில் உப்பை நீக்குங்கள்.
மனமும் உடலும் உங்கள் வசப்படும்.
அப்போது மனம் அமைதியடையும்
குழப்பமும் தீரும்
அதற்க்கு நீங்கள் தயாரா?
நீங்கள் மட்டுமல்ல
யாரும் அதற்க்கு தயாரில்லை.
//தகுந்த குருவை அடைந்து அந்த ஓட்டையை கண்டறிந்து அதை அடைத்தால்தான் நம் மனம் இறைவனின் நாமத்தால் நிரம்பி நம்முடைய சாதனை வெற்றிபெறும். //
Deleteதகுந்த குரு ????? கிடைக்க எங்கே போவது ?????
ஆண்டவா ! இவரும் தினமும் ஏதேதோ சொல்லி என்னைக் குழப்ப ஆரம்பித்து விட்டார்.
ஏற்கனவே நான் மிகவும் குழம்பிப்போய் உள்ளேன். தெளிவு கிடைக்கச்செய்வாயாக !.
பதில்:குழம்பித்தான் தெளியும்.
அதனால் கவலைப்படவேண்டாம்.
ஆனால் தெளிந்தபிறகு மீண்டும் குழப்பிக்கொள்ளாமல் இருக்கவேண்டும்.
//ஆனால் உங்கள் மனம் எங்கெல்லாம் சென்றுகொண்டிருக்கிறது என்பது
ReplyDeleteஉங்களுக்கே தெரியும்//
மனம் ஒரு குரங்கல்லவா. அது மரத்துக்கு மரம் கிளைக்குக்கிளை தாவிக்கொண்டே தான் இருக்கும். தாவாமல் தவமிருக்க நினைத்தாலும், மற்ற குரங்குகள் தாவுவதை பார்த்ததும், ஓர் எழுச்சி ஏற்படும். அதே நிலை தான் இன்றைய என் நிலையும். ;). .
//சிறிது காலம் அவைகளை உங்கள் மனதின் உள்ளே செல்ல அனு(மதிக்காதீர்கள் )//
ReplyDeleteஆகட்டும். அதனால் தான் இப்போது நான் பதிவேதும் வெளியிடவே இல்லை.
எனக்கு சுத்தமாகப்பிடிக்காது என்று தெரிந்திருந்தும் சிலர் தங்களின் சமீபத்திய செயல்களால் என்னை மிகவும் வெறுப்பேற்றி வருகிறார்கள்.
//பேச்சை குறையுங்கள் //
எப்போதுமே நான் அதிகமாகப் பேசக்கூடியவனே அல்ல. ஆனால் அதிகமாக எழுதக்கூடியவன். இப்போது அதையும் வெகுவாகக் குறைத்துக்கொண்டு விட்டேன்.
இருப்பினும் உங்க்ளுக்கு மட்டும் ஏதேதோ எழுதிக்கொண்டிருக்கிறேன்.
>>>>>
//சிறிது காலம் அவைகளை உங்கள் மனதின் உள்ளே செல்ல அனு(மதிக்காதீர்கள் )//
Deleteஆகட்டும். அதனால் தான் இப்போது நான் பதிவேதும் வெளியிடவே இல்லை.
எனக்கு சுத்தமாகப்பிடிக்காது என்று தெரிந்திருந்தும் சிலர் தங்களின் சமீபத்திய செயல்களால் என்னை மிகவும் வெறுப்பேற்றி வருகிறார்கள்.
நிச்சயமாக அது இவன்தான் என்று நன்றாக தெரிகிறது.
இருந்தாலும் அதை தவிர்க்க இனி முயற்சிக்கிறேன். இவனுக்கு யார் மனதும் புண்படக்கூடாது
//உணவில் உப்பை நீக்குங்கள்//
ReplyDeleteஉப்பில்லாப்பண்டம் குப்பையிலே. என்னால் ஒரு நாள் ஏன் ஒரு வேளைக்கூட நீக்க முடியாது ஸ்வாமீ.
.
//மனமும் உடலும் உங்கள் வசப்படும்.//
துவண்டு போய் விடுவேன்.
//அப்போது மனம் அமைதியடையும் குழப்பமும் தீரும்//
உப்புச்சப்பில்லாமல் வாழ்ந்தால் என் மனம் ஒருபோதும் அமைதி அடையாது. புதிய குழப்பங்களை அவை ஏற்படுத்திவிடும்.
//அதற்க்கு நீங்கள் தயாரா?//
இல்லை. தயார் இல்லை. என் தாயார் உயிருடன் இருந்து இதைக்கேட்டால் துடித்துப்போய் விடுவார்கள்.
//நீங்கள் மட்டுமல்ல, யாரும் அதற்கு தயாரில்லை.//
பிறகென்ன சார். நாமும் ஊரோடு ஒத்துப்போவோமே.
நான் எழுதியுள்ள “உணவே வா ! உயிரே போ” தயவுசெய்து படித்துப்பாருங்கள்
http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html.
//உணவில் உப்பை நீக்குங்கள்//
Deleteஉப்பில்லாப்பண்டம் குப்பையிலே.
என்னால் ஒரு நாள் ஏன் ஒரு வேளைக்கூட
நீக்க முடியாது ஸ்வாமீ.
உப்பை தின்பவன்
தண்ணீரை குடித்தாக வேண்டும்.
தண்ணீர் குடிப்பதால்
உடல் எடை அதிகரிக்கிறது.
உடல் எடை அதிகரிப்பதால்
உண்ணும் உணவு அதிகரிக்கிறது.
தேவைக்கு மேல் உண்பதால் உடல் பெருத்து,
உடலின் உள்ளே உள்ள கருவிகள் சோர்ந்து போய்
பழுதடைந்து மனிதன் நோய்வாய் படுகிறான்.
உப்பு அதிகம் சேர்வதால் ரத்த கொதிப்பு உண்டாகி
இதயம் பழுதடைந்து நாம் சேர்த்து வைத்த
அத்தனை சொத்துக்களையும், மருத்துவர்களும்,
மருந்து கம்பனிகளும், பரிசோதனை கூடங்களும்
கொள்ளைஅடித்து செல்கின்றனர்.
இதெல்லாம் சற்று நினைத்து பாருங்கள்.
உப்பை குறைத்தால்
உடல் உப்பாமல் வாழலாம்.
உற்சாகமாக வாழலாம்.
அப்புறம் உங்கள் இஷ்டம்.
தெரிதே போய் கிணற்றில்
விழுபவரை யார் தடுக்க முடியும். ?
கட்டுப்பாடில்லாத வாழ்க்கை
காட்டாற்று வெள்ளம் போன்றது
அனைத்தையும் ஒரு சில நிமிடங்களில்
அடித்துக்கொண்டு போய்விடும்.