Sunday, May 5, 2013
ஆன்மீகத்தில் ஏன் முன்னேற்றம் இல்லை?
ஆன்மீகத்தில் ஏன்
முன்னேற்றம் இல்லை?
இன்று பலர் பலவிதமான
ஆன்மீக சாதனைகளை
மேற்கொள்ளுகிறார்கள்.
அவர்களில் பலரும் ஏதாவது
ஒரு கோரிக்கை நிறைவேருவதற்க்காக
சிலர் விரதங்களை மேற்கொள்ளுகிரார்கள்.
சிலர் புனித தலங்களுக்கு
யாத்திரை செய்கிறார்கள்.
சிலர் பரிகாரங்கள், பூஜைகள், செய்கிறார்கள்
.சிலர் ஆன்மீக வாதிகளை நாடுகிறார்கள்.
சிலருக்கு கோரிக்கைகள் நிறைவேறுகிறது
பலருக்கு எதுவும் நடப்பதுகிடையாது. ,
சிலர் எல்லாம் இறைவன் செயல் என்று
எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாது
சோம்பி திரிகிறார்கள்.
அதனால் நிலைமை
இன்னும் மோசமாக போய்விடுகிறது.
அவர்கள் மனதில்
ஒரு வெறுமை கவ்விக்கொள்கிறது.
அவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட
கடமைகளை செய்ய தவறிவிடுகிறார்கள்.
அதனால் வேறு அவர்களுக்கு பலவிதமான
பிரச்சினைகள் தோன்றுகின்றன
அதனால் அவர்கள்மன
நிம்மதியின்றி தவிக்கிறார்கள்.
அவர்களை சார்ந்தவர்களும், அவர்களை
சுற்றியிருப்பவர்களும் அவர்களை
வெறுக்க தொடங்குகிறார்கள்.
இதனால் அவர்களின் நிலைமை
இன்னும் மோசமாகிறது.
எல்லோரும் தன்னை வெறுக்கிறார்கள்
என்று எண்ண தொடங்குகிறார்கள்.
கலங்கிய மனம் தவறான
வழிகளை நாடி,அழிவினை தேடிக்கொள்கிறது.
ஆன்மிகம் என்பது
ஒரே நாளில் கட்டிமுடிக்கப்படும்
மந்திர கோட்டையல்ல
அதுஉறுதியான அடித்தளத்துடன்
ஒவ்வொரு செங்கலாக நம்பிக்கை ,
விடாமுயற்சி என்னும் கலவை கொண்டு
பக்தி என்னும் நீரால் குழைக்கப்பட்டு
கட்டப்படவேண்டும்.
எப்படி கட்டிடம் கட்டப்படு முன்
ஒரு வரைபடம் மற்றும் திட்டம்
வகுக்கப்படவேண்டுமோ
அதைபோல். நம்முடைய நிலைக்கு ஏற்ப
ஆன்மீக சாதனைகளை கவனமாக
பரிசீலித்து. தேர்ந்தேடுக்கவேண்டும்.
பிறர் சொல்லுவதை கேட்டோ.சரியான
வழிகாட்டுதலின்றி செயல்பட்டால்
தோல்விதான்கிடைக்கும்.
ஒரு பாதையை தேர்ந்தெடுத்த பின்
அதன் முடிவை அடையும்வரைக்கும்
அதிலிருந்து எத்தனை
சோதனைகள் வந்தாலும்
பின்வாங்கக்கூடாது.
அவ்வாறு உறுதியாக நின்றவர்கள்தான்
இலக்கை அடைந்து இன்று நம்மிடையே
மகான்களாக உலவி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
/// சரியான வழிகாட்டுதலின்றி செயல்பட்டால்
ReplyDeleteதோல்விதான்கிடைக்கும்... ///
முதலில் இதை உணர வேண்டும்...
உணர வேண்டும்...
Delete//ஒரு பாதையை தேர்ந்தெடுத்த பின் அதன் முடிவை அடையும்வரைக்கும்
ReplyDeleteஅதிலிருந்து எத்தனை சோதனைகள் வந்தாலும் பின்வாங்கக்கூடாது.
அவ்வாறு உறுதியாக நின்றவர்கள்தான் இலக்கை அடைந்து இன்று நம்மிடையே மகான்களாக உலவி வருகிறார்கள். //
”ஒவ்வொரு அடி வீதம் பல இடங்களில் தோண்டினால் தண்ணீர் கிடைக்காது.
ஒரே இடத்தில் பல அடிகள் தோண்டிக்கொண்டே போக வேண்டும். அப்போது தான் நீர் கிடைக்கும்” என்று சொல்லுவார் ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்.
நல்ல பகிர்வுக்கு நன்றி.
நன்றி. வைகோபாலகிருஷ்ணன் அவர்களே.
Deleteஇந்த கருத்தை இந்த உலகிற்கு முன்பே
நமக்களித்தவர் பகவான் ஸ்ரீ ராமக்ரிஷ்ணபரமஹம்சர்
அவர் கருத்தைதான் நான் இளமையிலேயே
என் உள்ளத்தில் பதித்து கொண்டேன்
என்னை மட்டுமல்ல அனைவரையும்
கடைதேற்றுவது இராம நாமே என்று.
அதைதான் இன்று வலையில்
பதித்துக்கொண்டிருக்கிறேன்.