Sunday, May 5, 2013

பக்தியில் படித்தவனும் பாமரனும்.


பக்தியில்
படித்தவனும் பாமரனும். 

படித்தவனுக்கு தான் படித்தவன் 
என்ற அகந்தை இருக்கிறது.

அவன் படிக்காதவனை 
ஏளனமாக பார்க்கிறான். 

படித்தவன் மற்றவர்களின் 
மனங்களை சுத்தம் செய்ய நினைத்து 
முடிவில் எப்படி கந்தை துணி எல்லா 
அழுக்குகளையும் நீக்கபோய்தான் முழுவதும்  
அழுக்கு துணியாக மாறிவிடுகிறதோ 
அதுபோல முடிவில் படித்தவனும் 
அவ்வாறே அவன் மனதில் 
அனைத்து அழுக்குகளும் 
ஒட்டிக்கொண்டு விடுகின்றன.

படித்தவன் மனம் எளிதில் 
ஒருமுகப் படுவதில்லை

ஏனென்றால் அவன் பல தத்துவங்களை
படித்ததாலும், விவாதிப்பதாலும் 
அவனுக்கு எதிலும் நம்பிக்கை 
அவ்வளவு எளிதாக வருவதில்லை. 
அவன் எப்போதும் குழப்பத்தில் இருக்கிறான்

ஆனால் படிக்காதவனுக்கு 
அந்த குழப்பம் இல்லை. 

அவன் செய்யும் எந்த செயலிலும் 
தெளிவாக இருக்கிறான் 

ஆன்மீக வரலாறுகளைப் பார்த்தால் 
படித்தவன் பல ஆண்டுகள் தவம் செய்தும் 
இறைவனை காணாது தவிக்கிறான்

ஆனால் பாமரனோ விரைவில் 
இறைஅருளை பெற்று விடுகிறான்

கண்ணப்பநாயனாராக இருக்கட்டும், 
சபரியாகட்டும், ஒரே நாளில் 
இலக்குமிநரசிம்மரின் தரிசனம் பெற்று 
காட்டில் திரிந்த வேடனாகட்டும்.
துகாராம் ஸ்வாமிகள் ஆகட்டும் 
 படிக்காதவர்களே.

அவர்களின் நம்பிக்கை,
 பக்தி இரண்டும் அவர்களுக்கு 
இறைஅருளை பெற்று தந்தது. 

ஒரு கராத்தே வீரன் நெருப்பில் 
கை வைப்பதற்கு பல மாதங்கள்
 பயிற்சி பெறுகிறான். 

ஆனால் கிராமங்களில் 
திரௌபதி அம்மனுக்கும் காப்பு கட்டும்
பக்தர்கள் ஒரே நாளிலேயே 
கோவிந்தா கோவிந்தா என்று 
உச்சரித்துக்கொண்டே தீ மிதிக்கின்றனர்.
தீ நாக்குகள் அவர்களை 
ஒன்றும் செய்வதில்லை  

அதுபோலத்தான் முருக பக்தர்கள்
 உடல் முழுவதும் அலகு 
குத்தி கொள்கின்றனர்.
 வலியை உணராது. 

எல்லாம் பக்தியின் 
வலிமை. 

4 comments:

  1. அப்பாடா... விளக்கம் கிடைத்து விட்டது... நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. கலங்காதிரு மனமே
      கடவுளை நினை அனுதினமே

      Delete
  2. பக்தியின் வலிமை அறிந்தேன். பாமரனாகவே இருந்தால் நல்லா இருக்கும் போலிருக்கு.பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களை யார் படித்தவனாக
      தம்பட்டம் அடித்துக்கொள்ள சொன்னது?

      அனைத்தையும் கற்றவன்
      அமைதியாய் இருப்பான்

      அரைகுறையோ அனைவரின்
      அமைதியையும் கெடுப்பான்

      மெத்த படித்தவன் யாரும் அறிவாளி இல்லை
      படிக்காதவன் யாரும் அறிவிலி இல்லை

      ஏட்டு படிப்பு பிறர் கேட்டு
      மகிழ நன்றாயிருக்கலாம்

      வாழ்க்கை தரும் அனுபவ படிப்புதான்
      அனைத்தையும் தரும்.

      பாமரனாக இருப்பதில் தவறில்லை.
      பண்புள்ளவனாக இருந்தால் போதும்
      பக்தியுள்ளவனாக இருந்தால் போதும்
      பணிவுள்ளவனாக இருந்தால் போதும்
      பாசமுள்ளவனாக உயிர்களிடத்தில்
      இருந்தால் போதும்

      பசித்தோர்க்கு உணவிடும்
      மனம் உள்ளவனாக இருந்தால் போதும்.
      பகட்டுக்காக பணத்தை வாரி இறைக்கும்
      பண்பற்றவனாக இல்லாமல் இருந்தால் போதும்

      Delete