சிவானந்தரின் சிந்தனைகள்
எண்ண ஆற்றல் (தொடர்ச்சி)
உலகப் புகழ் பெற்ற இந்த மனிதர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புக்கள் அனைத்தையும் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொண்ட படியால் மிகவும் மேன்மை அடைந்தனர்
உண்மையில் வாய்ப்புக்களை இறைவன்தான் மனிதனுக்கு அவ்வப்போது அளித்து அவன் மனதை உருவாக்குகின்றார்
எனவே கெட்ட சூழ்நிலைகளை பற்றியே சிந்தித்து, கெட்டதையே பார்த்து கெட்டதையே பற்றியே விவாதித்து உன் மனதை பலவீனப்படுத்திகொள்ளாதே
அதையே பார்க்கும் ஒவ்வொருவரிடமும் அதை பற்றி முணு முணுக்காதே
எதிரிடையான சூழ்நிலைகளில் வளர்ச்சி அல்லது உயர்வுபெற அயற்சியில்லாமல்,தளர்சியில்லாமல் முயற்சி செய்யும் மனிதன்தான் உண்மையில் மிகவும் வலிமையுடையவன்
அவனை எதுவும்
ஒன்றும் செய்ய முடியாது.
எந்தவிதமான அச்சுறுத்தலுக்கும் அவன் பயப்படுவதில்லை.
அவன் கோழை போல் பிரச்சினைகளைக் கண்டு அஞ்சி ஓடமாட்டான்.
அவன் உருக்கு இரும்பு போல் உறுதியான பொருட்களால் ஆக்கப்பட்டவன்.
அவன் எலும்பில்லா புழுப்போல் நெளியமாட்டன். அவன் வலுவான் நரம்புக்கட்டுகள் உள்ளவன்
உண்மையில் மனிதன் சூழ்நிலைகளாலும் வாய்ப்புக்கலாலும் உருவாக்கப்பட்டவன் அல்ல
எனவே அவன் தன்னுடைய ஆற்றல்கள்,பண்புகள்,எண்ணங்கள்,நல்ல செயல்கள் நல்ல புருஷார்த்தங்கள் ஆகியவற்றால் அவற்றை அடக்கி மாற்றி அமைத்துக்கொள்ளும் சக்தியும்,தகுதியும் அவனுக்கு உண்டு.
"தீவிர புருஷார்த்தம்" தலைவிதியையே மாற்றிவிடக்கூடும்.
ஆகையால்தான் வஷிச்டரும், பீஷ்மரும் புருஷார்த்தத்தை தலைவிதிக்கு மேலாக வைத்துள்ளார்கள்.
எனவே அன்புள்ள சகோதரர்களே !
முயற்சியை மேற்கொள்ளுங்கள்.
என்னால் முடியாது, எனக்கு சரிப்படாது,
என்னால் இயலாது என்ற எதிர்மறை
எண்ணங்களை தூக்கி எறியுங்கள்.
கோழைகளாக இருப்பவர் முதுமையில் நெஞ்சில் கோழை கட்டி மூச்சுவிடமுடியாமல் அசையாமல் படுக்கையில் கிடந்து மரணிக்க நேரிடும்
வீரனாக இருப்பவன் தன்குறிக்கோளை நோக்கி செல்லுகையில் எதிர்ப்படும் மரணத்தையும் வெற்றியாகவே கருதி மகிழ்வான்.
எனவே கிடைதற்க்கரிய இந்த மனித பிறவியைக் கொண்டு இயற்கையை வென்று நிலையான சச்சிதானந்த ஆத்மாவில் பேரின்பமடையுங்கள்.
/// எதிர்மறை எண்ணங்களை தூக்கி எறியுங்கள்... ///
ReplyDeleteஅந்த மாதிரி சிந்தனைகளே நம்மை முற்றிலுமாக கவிழ்த்தும் விடும்...
அருமையான கருத்துகளுக்கு நன்றி ஐயா...
நன்றிDD
ReplyDeleteஆஹா, அருமையான அறிவுரைகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteசிவானந்தரின் சிந்தனைகள் சிறப்பான சிந்திக்கவைக்கும் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்களை
Deleteபகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி