Wednesday, May 8, 2013

சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்


சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்


சுவாமி சிவானந்தரின் 
சிந்தனைகள் 

எண்ண ஆற்றல் 

ஒவ்வொரு மனிதனும்
சம்ஸ்காரங்களுடன்தான்
பிறக்கிறான்

மனம் என்பது எழதப்படாத
வெள்ளைத்தாள் போன்றதல்ல

முற்பிறவிகளின் எண்ணங்கள் ,செயல்கள் ஆகியவற்றின் பதிவுகள் அதில் அடங்கியுள்ளன

சம்ஸ்காரங்கள் கண்ணுக்கு
 புலப்படாத சக்திகள்

இந்த நல்ல சம்ஸ்காரங்கள்
விலை மதிக்கமுடியாத சொத்துக்களாகும்

வசதியற்ற சூழ்நிலைகளில் இருந்தாலும் ,ஒருவனுக்கு ,வெளியிலுள்ள,விரும்பதாகாத ,விரோதமான  சக்திகளுக்கெதிராக  இந்த சம்ஸ்காரங்கள் பாதுகாப்பளிக்கின்றன
அவனுடைய வளர்ச்சிக்கும் பரிணாம
மாறுதலுக்கும் உதவுகின்றன

வாய்ப்புக்களை தவறவிடாதே.
வாய்ப்புக்கள் அனைத்தையும் பயன்படுத்திக்கொள்
ஒவ்வொரு வாய்ப்பும் உன் மேன்மைக்கும் வளர்ச்சிக்காகவே ஏற்ப்படுகிறது


வழியில் அனாதையாக கிடக்கும்
ஒரு நோயாளியைக் கண்டால் உன் தோளிலோ அல்லது ஒரு வாகனத்திலோ அவனை எடுத்து சென்று அருகிலுள்ள மருத்துவ சாலையில் சேர்த்து  அவனுக்கு தேவையான உதவியை செய் .சூடான  பால், காபி,அல்லது தேனீர் கொடு

தெய்வீக பாவனையோடு அவன் கால்களுக்கு மருந்தை தடவு.

உன் அன்பையும் பரிவுணற்சியையும் வளர்துக்கொள்ளவும்,உன் உள்ளத்தை தூய்மை படுத்திக்கொள்ளவும் ,துவேஷத்தை போக்கிக்கொள்ளவும் ,வெறுப்பு,பொறாமை ஆகியவற்றை களைந்தெரியவும்தான் இறைவன் இந்த வாய்ப்பை உனக்கு அளித்திருக்கிறார்.

சில நேரங்களில் நீ கோழையாக இருக்கும்போது இறைவன் உனக்கு இம்மாதிரி சூழ்நிலைகளை கொடுப்பார்.
அப்போது நீ தைரியத்தையும்,நெஞ்சுரத்தையும் சுருசுறுப்பையும் உன்னுடைய உயிரைப் பணயம் வைத்து கூட காட்டவேண்டும்.

(இன்னும் வரும்)

6 comments:

  1. /// வாய்ப்புக்களை தவறவிடாதே ///

    முக்கியம்...

    /// உன்னுடைய உயிரைப் பணயம் வைத்து கூட காட்டவேண்டும்... ///

    சத்தியமான வரிகள்... (எனது சிறிய அனுபவத்தில்...)

    சிறப்பான சிந்தனைகளுக்கு நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும்
      அந்த அனுபவம் இருக்கும்.

      அதை அவர்களும் மறந்துவிட்டிருக்கலாம்.
      உதவி பெற்றவர்களும் மறந்திருக்கலாம்

      ஆனால் உத்தம குணம் கொண்டவன்
      அதை என்றும் மறக்கமாட்டான்.

      அதை போன்றவர்கள் லட்சத்தில்
      ஒன்றாக தான் இருப்பார்கள்.

      இதை நான் என்
      அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

      Delete
  2. //வழியில் அனாதையாக கிடக்கும் ஒரு நோயாளியைக் கண்டால் உன் தோளிலோ அல்லது ஒரு வாகனத்திலோ அவனை எடுத்து சென்று அருகிலுள்ள மருத்துவ சாலையில் சேர்த்து அவனுக்கு தேவையான உதவியை செய் .சூடான பால், காபி,அல்லது தேனீர் கொடு

    தெய்வீக பாவனையோடு அவன் கால்களுக்கு மருந்தை தடவு.

    உன் அன்பையும் பரிவுணற்சியையும் வளர்துக்கொள்ளவும்,உன் உள்ளத்தை தூய்மை படுத்திக்கொள்ளவும் ,துவேஷத்தை போக்கிக்கொள்ளவும் , வெறுப்பு,பொறாமை ஆகியவற்றை களைந்தெரியவும்தான் இறைவன் இந்த வாய்ப்பை உனக்கு அளித்திருக்கிறார்.//

    ஆஹா, அருமையான உபதேசங்கள் தான்.

    ஆனால் இதை எவனாவது ஒருவனாவது இன்று பின்பற்றுவானா? நடைமுறைக்கு ஒத்தும் வரும் சமாச்சாரங்களா இதெல்லாம். அவனவன் காலில் சக்கரத்தைக்கட்டிக்கொண்டு தலைதெறிக்க ஓடி ஓடி சம்பாதிக்கச்செல்கிறான்

    அடிப்பட்டு விப்த்தானாலும் கூட எட்டிப்பார்த்து உதவ ஒருபயலும் வருவது இல்லை. என்னவோ போங்க. நீங்களும் நல்லபல விஷயங்களைத்தான் சொல்லி வருகிறீர்கள். கேட்கவாவது சந்தோஷமாக உள்ளது. நன்றி சார்.

    ReplyDelete
    Replies
    1. ஏன் இல்லை?

      எத்தனையோ பேர்
      இந்த உலகில்
      இன்னும் இருக்கிறார்கள்

      அவர்களை விளம்பரத்தை
      நாடுவது கிடையாது

      ஆனால் அவர்களால் காப்பாற்றப்பட்டவர்கள்
      கூறும் சம்பவங்களை கேட்டால் சொல்லுவார்கள்.

      ஊடகங்களும் சதை பிண்டங்களை காட்டி
      மக்களை மயக்கி நாசமாக்கும்
      முண்டங்களுக்குதான் முக்கியத்துவம் தருகின்றன.
      அதுதான் கலி காலத்தின் கோலம்.

      யாகங்கள் செய்ய லட்சக்கணக்கில்
      நிதி கோரி விளம்பரம்.

      ஆனால் தியாகம் செய்பவர்கள்
      பெருமையறியாது இந்த நன்றி கெட்ட உலகம்
      ஊமையாகி ஓடி ஒளிகிறது .
      என்ன செய்ய?

      இந்த உலகம்
      உழைப்பவர்களால் வளரலாம்

      இந்த உலகத்தில் சோம்பேறிகளும் தேவைதான்
      அவனும் இந்த உலகத்திற்கு சேவைதான் செய்கிறான்
      என்று மார்க் அரேலியஸ் என்ற கிரேக்க ஞானி சொல்கிறார்.
      எப்படி என்றால் மற்றவர்கள் உழைத்து சேவை செய்கிறார்கள். இவனோ உழைக்காமல் சேவை செய்கிறான் என்று.

      ஆனால் தியாகம் செய்பவர்களால்
      மட்டும்தான் இந்த உலகம்
      இன்னும் உயிரோடு இருக்கிறது
      என்பதை இந்த மனித குலம்
      உணர வேண்டும்

      .

      Delete
  3. வாய்ப்புக்களை தவறவிடாதே.
    வாய்ப்புக்கள் அனைத்தையும் பயன்படுத்திக்கொள்
    ஒவ்வொரு வாய்ப்பும் உன் மேன்மைக்கும் வளர்ச்சிக்காகவே ஏற்ப்படுகிறது

    படிக்க வாய்ப்பளித்த சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள் ஐயா..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களை
      பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி

      Delete