Thursday, May 30, 2013

தியாகராஜ சுவாமி சிந்தனைகள் (51)

தியாகராஜ சுவாமி 
சிந்தனைகள் (51)






இராமா!என்னை பாலிக்கும் தெய்வமே!
என்னைக் காக்க இதுவே தருணம்.

கீர்த்தனை (191)-ராம சமயமு ப்ரோவ-ராகம் மத்யமாவதி -தாளம்-ஆதி. 

இராம! என்னை பாலிக்கும் தெய்வமே!
என்னைக் காக்க இதுவே தருணம்
அரக்கரை வதைப்பவனே!
மேக வண்ணனே!
சதா நியமத்துடன் உன் நாம சங்கீர்த்தனம்
செய்யும் மகான்களின் விருப்பத்தையளிப்பவனே !

புலன்களை அடக்கியவர்களைக் காப்பவனே!
வேதங்களில் சஞ்சரிபவனே!
பக்தரின் உள்ளத்துறைபவனே!
திருமகள் நாயகனே!
உள்ளம் கவரும் குணசீலனே!
காலனை வென்ற சிவனின் தோழனே!
முடிவற்றவனே!
முனிவரால் தியானிக்கப்படுபவனே!
மறைமுடியால் அறியப்படுபவனே!
மகாராஜர்களால் தொழப்படுபவனே!
சாந்த ஸ்வரூபனே!
கருணை நிரம்பிய உள்ளத்தவனே!

தேவர்,முனிவர் குழாத்தினால்
தொழப்படும் பாதனே!
பக்தருக்கு ஆனந்தம் அளிப்பவனே!
சூரிய குலத்திற்கு சந்தனம் போல்
குளிர்ச்சி தருபவனே !
சத்ருக்களை ஒழிப்பவனே!
நந்தகமென்னும்
கத்தியை அணிந்தவனே!

சனந்தனர் முதலியோரால்
துதிக்கப் பெறுபவனே!
முல்லைப் பற்களையுடையவனே!
மந்தர மலையை தாங்கியவனே!

கோவிந்த!முகுந்த!
என் மீது உனக்கென்ன சந்தேகம்?

இவ்வுலகில் காரணமின்றி
அருள் புரிபவன் நீ என்று
உன்னை பூசித்தேன் .
கஜேந்திர ரஷகா!

அந்த யானை அரசனால்
வணங்கப்பெற்றவனே!

சேஷ சயன!

கேளாய்!உலகநாயகனே!சீதாபதியே !
ஒளி வீசும் கிரீடத்தை அணிந்தவனே!
பிரமனால் தொழப்படுபவனே!

இதுவே நீ என்னைக்
காக்க வேண்டிய  சமயம்.

மிக அருமையா ,
பொருள் பொதிந்த ஒரு பிரார்த்தனை பாடலை 
நமக்காக ஸ்வாமிகள் இயற்றி தந்துள்ளார். 

இதை தினமும் நாம்  பாடி வந்தால் போதும் 
அந்த இராமபிரானின் அருள் நமக்கு 
நிச்சயம் கிடைத்துவிடும். 

Pic-courtesy-google images 


5 comments:

  1. புலன்களை அடக்கியவர்களைக் காப்பவனே...

    முக்கியமானது...

    சிறப்பான கீர்த்தனை விளக்கத்திற்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  2. இவ்வுலகில் காரணமின்றி
    அருள் புரிபவன் நீ என்று
    உன்னை பூசித்தேன் .
    கஜேந்திர ரஷகா!


    மிக அருமையான ,
    பொருள் பொதிந்த ஒரு பிரார்த்தனை பாடலை
    நமக்காக ஸ்வாமிகள் இயற்றி தந்துள்ளார்.

    அருமையாய் பகிர்ந்தமைக்கு இனிய நன்றிகள்..!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்
      மேற்கோள் காட்டி
      கருத்துக்களை
      பகிர்ந்தமைக்கும் நன்றி.

      Delete
  3. மிக அருமையான, பொருள் பொதிந்த ஒரு பிரார்த்தனை பாடலை
    நமக்காக ஸ்வாமிகள் இயற்றி தந்துள்ளார்.

    அருமையாய் பகிர்ந்தமைக்கு இனிய நன்றிகள் அண்ணா..!

    மீண்டும் தெளிவான ருசியான ரஸம் கிடைத்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.

    ReplyDelete