தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள்(41)
மனதிற்கு உபதேசம்
மனமே நீ துர்ப்புத்தியை விட்டுவிடு !
நிரந்தரமான பலனை அளிக்கக்கூடிய
தகுந்த பாத்திரம் அதாவது தெய்வம்
யாரென்பதை அறிந்துகொள்.
இப்பூவுலகில் பிறந்தவனுக்கு
அவரவர் பழ வினைப்படி தகுந்த
பயன் கிடைக்குமென்று பெரியோர்கள்
கூறி நீ கேட்டதில்லையா?
இவ்வனைத்தும் ஸ்ரீ வாசுதேவனே '"
என்று சிந்தனை செய்வாயாக.
(கீர்த்தனை-செடெ-புத்தி -(326)-ராகம்-அடாண-தாளம்-ரூபகம்)
மனம்தான்அனைத்து
துன்பங்களுக்கும் காரணம்
அதே சமய்ம் மனதின் ஒத்துழைப்பு
இருந்தால்தான் இறைவனிடம்
பக்தி செய்ய முடியும்.
அதனால்தான் ஸ்வாமிகள்
பல கீர்த்தனைகளில் மனதிற்கு
உபதேசம் செய்கின்றார்.
தீயவைகளை நினைத்து
தீய செயல்களை செய்யும் தீய புத்தியை
விட்டுவிடவேண்டும் என்று
மனதிற்கு அறிவுறுத்துகிறார்.
அவரவர் முன்வினைப்படிதான்
இந்த பிறவியில் வாழ்வும் வசதிகள் அமையும்
என்று பெரியோர்கள் கூறியதை நினைவுபடுத்துகிறார்.
அதை மனதில் கொண்டு அமைதியோடு
தன் கடமைகளை ஆற்றுமாறும்,
அனைத்தும் ஸ்ரீ வாசுதேவனின் ஆணைப்படிதான்
இயங்குகிறது என்பதை மனதில் கொண்டு
இறைவனிடம் பக்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார்.
இந்த உலகில் படிக்காத கைனாட்டிடம்
செல்வம் கொட்டிக்கிடக்கிறது.
படித்த பலபேர் அவனிடம் கைகட்டி
சேவகம் செய்வதை பார்க்கிறோம்.
அதேபோல் அரசியல்வாதிகள்
நாட்டை ஆளும் பொறுப்புக்கு வந்தவுடன்
அனைவரும் அவர்களுக்கு மரியாதை
செலுத்த வேண்டியுள்ளது.
இப்படி பல உதாரணங்கள் உண்டு இவ்வுலகில்.
அனைத்தும் அவரவர்
முன்வினைப்பயனால் பெறப்படுகின்றன.
அதனால் இதையெல்லாம் கண்டு
மனம் பொறாமை கொள்ளாது
அமைதியுடன் இறைவனிடம்
பக்தி செலுத்தவேண்டும்.
Pic.-courtesy-google images
அருமை. மிக அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteநன்றிVaico sir
Deleteபொறாமை - மோசமான குணம்... அதனால் கோபம், இயலாமை, சண்டை, சச்சரவு... சொல்லிக் கொண்டே போகலாம்...
ReplyDeleteவிளக்கங்களுக்கு நன்றி ஐயா...
நன்றிDD
Delete