தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள்(49)
இராம பக்தி
என்னும் மார்க்கம் எது?
புவி முழுவதும் இங்குமங்கும்
மாந்தர்கள் திரிந்துகொண்டு
கலவரப்படுகிறார்களே தவிர
இராம பக்திஎன்னும்
நல்வழியை அறியமாட்டார்
அதிகாலையில் எழுந்து ,
நீராடிய பின்னர்
விபூதி முதலியன அணிந்துகொண்டு
ஜபம் செய்வதுபோல் விரல்களை
விட்டு விட்டு எண்ணி
வெளிக்கு நல்லவர்கள்போல் நடித்து
நன்கு பணம் திரட்டுவதில்
ஆசை கொள்வார்களே தவிர
இராம பக்தி மார்க்கத்தை
அறியமாட்டார்கள்.
(கீர்த்தனை-49-தெலியலேருராம பக்தி மார்கமு -ராகம்-தேனுக-(மேள-9)-தாளம்-தேசாதி )
மிக அருமையான கீர்த்தனை
இன்று மாந்தர்கள் எப்படி இருக்கிறார்களோ
அன்றும் .மாந்தர்கள் அப்படிதான்போலும்.
மாந்தர்கள் காலையில் கண் விழித்ததும்
ஊடகங்களை தான் காண்கின்றனர்.
செய்தி தாள்களைதான் படிக்கின்றனர்.
செய்திகளைத்தான் கேட்கின்றனர்.
கொலை,கொள்ளை, வன்முறை,
இயற்கை இடர்ப்பாடுகள், போர்
பற்றிய பிற செய்திகளையும்
அறியவே ஆர்வம் காட்டுகின்றனர்.
இன்றைய மனிதர்கள் பிறரின்
வாழ்க்கையின் அந்தரங்கங்களை தெரிந்துகொண்டு
அதை வம்பளக்க காட்டும் ஆர்வம்
தன் மனதில் புரையோடிபோயிருக்கும்
காம குரோத,லோப ,மோகம், மத மாச்சர்யம்
போன்ற தீய குணங்களை
இனம் கண்டுகொண்டு அவைகளை
ஒழிக்க அக்கறை காட்டுவது கிடையாது.
நம்மை மீளா உறக்கத்தில் ஆழ்த்தாமல்
நம்மை உயிரோடு நாளை தொடங்க வழி வகை
செய்த கருணாமூர்த்தியான இறைவனை
அனைத்தையும் மறந்து அவனை
ஒருமையுடன் நினைப்பதும் கிடையாது.
அவனை வாழ்த்துவதும் கிடையாது.
வணங்குவதும் கிடையாது.
அப்படி வழிபாடுகள் செய்யும்
ஒரு சிலரும் கடமைக்காகதான்
அதை செய்கின்றனரே தவிர உண்மையுடனும்
நம்பிக்கையுடனும் ஈடுபடுவதுகிடையாது.
எந்நேரமும் காசை சேர்க்க அலைவதும்
பிறகு சேர்த்த காசை அழிப்பதும்தான்
இன்றைய மனிதர்களின் தலையாய
கடமைகளாக போய்விட்டது.
இனிமேலாவது மனித குலம் திருந்தவேண்டும்.
இராம பக்தி மார்க்கத்தை அறிந்துகொண்டு உய்யவேண்டும்.
இல்லாவிடில் வருந்துவதை தவிர வேறு வழியில்லை.
Pic.courtesy-googleimages
இராம பக்தி
ReplyDeleteஎன்னும் மார்க்கம்
இருக்க வருத்தம் ஏன் ..??!
பக்தி இருந்தால் பதியை அடையலாம்
Deleteஅது கைலாசபதியோ அல்லது வைகுண்ட பதியோ
அல்லது வேங்கடாசலபதியையோ அடையலாம்
பக்தி இருந்தால் உள்ளத்திலும் உடலிலும் சக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்
தற்காலத்தில் சக்தியை வீணடிக்கும்
செயல்களில்தான் மக்களுக்கு நாட்டம்
அதனால்தான் இத்தனை வாட்டம்
எல்லோர் முகத்திலும்
உங்களின் ஆதங்கமும் புரிகிறது... இன்றைக்கு ஆழ்ந்த ஈடுபாடு கிடையாது என்பதும் உண்மை...
ReplyDeleteநன்றி DD
Delete//எந்நேரமும் காசை சேர்க்க அலைவதும் பிறகு சேர்த்த காசை அழிப்பதும்தான்
ReplyDeleteஇன்றைய மனிதர்களின் தலையாய கடமைகளாக போய்விட்டது. //
சிந்திக்க வைக்கும் அருமையான சிந்தனைகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம் !