Wednesday, May 15, 2013

இறைவன் இரக்கமே உருவானவன்


இறைவன் 
இரக்கமே உருவானவன்  




படைப்புகளிடம் கொண்ட 
இரக்கத்தினால்தான் 
அவன் விண்ணிலிருந்து
அவர்களை துன்பங்களிலிருந்து 
காக்கவும் அறியாமையிலிருந்து 
விடுவிக்கவும் படைப்புகளின் வடிவத்தில் 
விண்ணிலிருந்து இறங்கி புவிக்கு வருகிறான். 

அவன் அவ்வாறு வந்தாலும் அவனை
அறிந்துகொள்ளுபவர்கள் மிக அரிது 

உருவத்தில் தங்களை போன்றே அவன்
இருப்பதால் அவனை தங்களைபோன்றவன் என்றே
கருதி ஒவ்வொரு முறையும் கிடைத்தற்க்கரிய வாய்ப்பை இழக்கின்றனர்.

அவன் அனைத்தையும் சரி செய்தபின்
இந்த உலகில் நடமாடிய வடிவத்தை
மறைத்துக்கொண்டு விடுகிறான்

அவனை அறிந்தவர்கள் 
அவனின் பெருமையை
பற்றி கூறியபின் 
அறியாமையினால் அவனுடன் பழகியும் 
உண்மையை அறியாமல் போய்விட்டோம் என்று 
அவன் வடிவங்களை நினைத்து வணங்கி 
ஆதங்கப்படுகிறது மனித குலம்  

இறைவனை அடைய நினைப்பவர்கள் தங்கள் 
உள்ளத்திலும் அதே இரக்கம் இருக்க வேண்டும்
என்பதை உணர மறுக்கிறார்கள். 

மீளா உறக்கமாகிய மரணம் வருவதற்குள் 
அவனை வணங்கி அவன் அருள் பெற 
முயற்சி செய்யாது தினமும் உறங்கி 
காலத்தை வீணடிக்கிறது மனித குலம் 

குடலுக்காகவும், கூடலுக்காகவும் 
வாழ்நாள் முழுவதும் உழைத்து 
கணக்கில்லா பாவங்களை செய்யும் மனிதர்கள் 
இதை சிந்தித்தால் அவர்கள் எடுத்த 
இந்த பிறவி பயனுள்ளதாகும். 

Pic.courtesy-google-images 

7 comments:

  1. உணர வேண்டிய கருத்துக்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete
  2. வை.கோபாலகிருஷ்ணன்May 16, 2013 at 2:01 AM
    //மீளா உறக்கமாகிய மரணம் வருவதற்குள் அவனை வணங்கி அவன் அருள் பெற முயற்சி செய்யாது தினமும் உறங்கி காலத்தை வீணடிக்கிறது மனித குலம் //

    ஆஹா! எவ்வளவு நாட்களை வீணாக்கியுள்ளோம். இனி உறங்காமல் அவன் நினைவாகவே இருப்போம். அப்படியே உறங்கினாலும் கனவிலும் அவனே காட்சி தரட்டும்.

    //குடலுக்காகவும், கூடலுக்காகவும் வாழ்நாள் முழுவதும் உழைத்து//

    ருசியை நாக்கிலும், பசியைக் குடலிலும், பரமானந்தத்தைக் கூடலிலும் அல்லவா வைத்து மனிதர்களை சோதிக்கிறான் அந்த ஆண்டவன். ;(((((

    //கணக்கில்லா பாவங்களை செய்யும் மனிதர்கள் இதை சிந்தித்தால் அவர்கள் எடுத்த இந்த பிறவி பயனுள்ளதாகும். //

    சிந்தனை செய் மனமே ! என சிந்திக்க வைக்கும் சிறப்பான பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. இறைவனை அடைய நினைப்பவர்கள் தங்கள்
    உள்ளத்திலும் அதே இரக்கம் இருக்க வேண்டும்
    என்பதை உணர மறுக்கிறார்கள்.

    சிறப்பான சிந்திக்கவைக்கும் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி

      Delete