Wednesday, May 15, 2013

எல்லாம் அவன் செயல்


எல்லாம் அவன் செயல் 



எல்லாம் அவன் செயல் 
என்று இரு என்கிறார்கள்
அப்படியானால் மனிதர்களுக்கு இறைவன் 
மூளையையும், அறிவையும் எதற்கு அளித்திருக்கிறார்?

எல்லாம் அவன் செயல் என்றால்
எதுவும் செய்யாமல் சோம்பேறியாய் திரிவது
என்று பொருள் கொள்ளக்கூடாது

அவரவர்க்கு என விதிக்கப்பட்ட கடமைகளையும்,
அவரவர்க்கு என அமைந்த கடமைகளையும்,
அவரவர்கள் ஏற்றுக்கொண்ட தார்மீக கடமைகளையும்.
அகந்தைஇன்றி செவ்வனே செய்வது
என்று பொருள் கொள்ள வேண்டும்

இந்த உலகில் அனைத்தையும் படைத்து
அதனுள் ஆத்மாவாய் இருந்து
இயக்குபவன் இறைவனே.

இந்த உலகில் நாம் எதையும் புதிதாக
உற்பத்தி செய்யும் தகுதியோ அல்லது
அறிவோ நமக்கு கிடையாது.

ஏற்கெனவே இறைவனால் உண்டாக்கப்பட்டு
இருக்கும் பொருட்களை இடம் மாற்றிவைத்து
புதிதாக பொருட்களை தயார் செய்வதாக
அகந்தையினால் ஆட்டம்
போட்டுக்கொண்டிருக்கிறோம்.

நாம் ஒரு விதையை விதைத்தால் 
அது முளைத்து வளர்ந்து பலமடங்கு 
பலன்களை தருவதுடன் மீண்டும் தொடர்ந்து 
பலன் தர  வித்துக்களை தருகிறது. 

இதில்  நம்முடைய பங்களிப்பு 
ஒன்றும் இல்லை. இதைபோல்தான் 
அனைத்து செயல்களும். 
இறைவன்  அனைத்தையும் நமக்காக 
அவனே  செய்து விடுகிறான் 
என்பதை  உணர வேண்டும். 

இயற்கையின் சக்திகளுக்கு எதிராக 
போராடும் சக்தி நமக்கு கிடையாது. 
ஆனால் அந்த இயற்கையின் சக்திகளை
 நாம் பயன்படுத்திக்கொள்ள மட்டும் 
நமக்கு அனுமதி உண்டு 

ஆனால் நாம் இயற்கை சக்திகளை
 நாம் தேவைக்கு மேல் பயன்படுத்துகிறோம்,
அனைவருக்கும் கிடைக்கவேண்டுய சக்திகளையும்,
பொருட்களையும் சுயநலத்தால்
அனைத்தும் நமக்குதான் என்று எடுத்துக்கொண்டு
மற்றவரை துன்பத்திற்கு ஆளாக்குகிறோம்.

 அதனால்தான்  ஒரு சிலரின் தவற்றால்,
சுயநலத்தால் அனைத்து உலக மக்களும்
 பாதிக்கப்படுகின்றனர்.
அதனால் அனைவரும் துன்பப்படுவதுடன்,
 மன நிம்மதியின்றியும். நோய்வாய்ப்பட்டும் ,
 பசி பட்டினியுடனும்  மனித குலம்
அல்லல்படுகிறது.

எனவே அனைத்தையும் இறைவன்தான்
 இயக்குகிறான் என்பதை அறிந்துகொண்டு 
,நாம் இறைவனின் கருவிகளே என்று 
உணர்ந்துகொண்டு நாமும் நலமாக வாழ்ந்து
,நம்மை சுற்றியுள்ள உலகத்தையும் நலமாக
 வாழ செய்யவேண்டும். 

அந்த அறிவை பெறுவதற்காகதான்
இறைவன் மூளையையும் அறிவையும்
அளித்திருக்கிறானே ஒழிய. அகந்தை கொண்டு
அதை சுயநலத்திற்கு பயன்படுத்த அல்ல
 என்று புரிந்துகொள்ளவேண்டும்.

Pic-courtesy-google images

9 comments:

  1. அனைத்தையும் இறைவன்தான்
    இயக்குகிறான் என்பதை அறிந்துகொண்டு
    ,நாம் இறைவனின் கருவிகளே என்று
    உணர்ந்துகொண்டு நாமும் நலமாக வாழ்ந்து
    ,நம்மை சுற்றியுள்ள உலகத்தையும் நலமாக
    வாழ செய்யவேண்டும்.

    சிறப்பான கருத்துகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies

    1. பாராட்டுகளுக்கு நன்றி VGK

      Delete
    2. தங்களின் இந்தப்பாராட்டுக்களுக்கு உரிமையாளர் நான் அல்ல ஸ்வாமீ.

      //ஒரு சிலரின் தவற்றால், சுயநலத்தால் அனைத்து உலக மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.// என தாங்களே சொல்லியுள்ளீர்கள்.

      அடடா, நான் ஏற்கனவே பல பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளேன். மேலும் நான் பாதிக்கவே கூடாது. பாதிப்பைத் தாங்கும் சக்தி எனக்கு இனி இல்லை.

      எனவே தயவுசெய்து தங்களின் பாராட்டுக்களை உரியவர்களிடம் சேர்த்துவிட்டு, எனக்கு ஏதும் இதனால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வழி செய்யுங்கோ, ப்ளீஸ்.

      Delete
    3. அம்மணிக்காக உங்கள் பதிவில்
      பல பின்னூட்டங்களை இட்டதால்
      இயல்பாக VGK
      என்று வந்துவிட்டது.

      to err is human like me .to forgive is divine.

      Delete
    4. நான் ஏற்கனவே பல பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளேன். மேலும் நான் பாதிக்கவே கூடாது. பாதிப்பைத் தாங்கும் சக்தி எனக்கு இனி இல்லை.

      இந்த உலகில் பாதிக்கபடாதவர்கள் யார் ?
      பாதி அவர்களே வரவழைத்துக்கொண்டது
      மீதி அவர்கள் பிறக்கும்போதே கொண்டுவந்தது.
      அவைகளை அனுபவித்துதான் தீர்க்கவேண்டும்
      ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது
      அதைபோல் ஆண்டவனின் நாமத்தை பாடிக்கொண்டே
      இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவித்தால்
      அவைகள் நம்மை பாதிக்காது.

      Delete
    5. தப்பாக நினைத்தாலும்
      அது தப்பாகாது

      அதை இவனும் தப்பாக
      நினைக்கபோவதில்லை.

      நாம் அனைவரும்
      அந்த இறைவனை
      நம் நினைவு தப்பும்வரை
      தப்பாமல் நினைக்க
      முயற்சி செய்தால்
      அதுவே போதும்.

      மீண்டும் இந்த பிறவியில்
      சிக்கி தவிக்காது தப்பலாம்.

      Delete
  2. அருமையான விளக்கம் ஐயா...

    நன்றிகள் பல... வாழ்த்துக்கள்...

    இன்றைய பதிவு வாசித்தீர்களா...? (http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Speed-Wisdom-1.html)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி DD

      Delete
  3. //நாம் ஒரு விதையை விதைத்தால் அது முளைத்து வளர்ந்து பலமடங்கு
    பலன்களை தருவதுடன் மீண்டும் தொடர்ந்து பலன் தர வித்துக்களை தருகிறது.

    இதில் நம்முடைய பங்களிப்பு ஒன்றும் இல்லை. இதைபோல்தான் அனைத்து செயல்களும். இறைவன் அனைத்தையும் நமக்காக அவனே செய்து விடுகிறான் என்பதை உணர வேண்டும்.

    நாம் இறைவனின் கருவிகளே என்று உணர்ந்துகொண்டு நாமும் நலமாக வாழ்ந்து, நம்மை சுற்றியுள்ள உலகத்தையும் நலமாக வாழ செய்யவேண்டும். //

    நல்ல கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete