Sunday, May 5, 2013

சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்


சுவாமி சிவானந்தரின் 
சிந்தனைகள் 



எது  பக்தி?(பகுதி-1)

அன்பு என்பது 
ஒரு மாபெரும் சக்தியாகும்

அன்பு வாழ்க்கையின் 
சாரமாகும் 

அன்பைக் கொடு

இந்த அன்பை சேவை, ஜபம்,
சத்சங்கம்,.தியானம் ஆகியவற்றின்
மூலமாக விருத்தி செய் 

மனித அன்பு 
எல்லாம் கபடமானது

இது வெறும் மிருக 
கவர்ச்சியே ஆகும் 

இது காமம்

இது சரீர அபிமானமுள்ள 
சிற்றின்ப அன்பாகும் 

இது சுயநலத்தோடு 
கூடிய அன்பாகும்

இது சதா மாறிக்கொண்டே 
இருக்கக் கூடியது 

இது எல்லாம் பகட்டும் 
வெளி வேஷமும் ஆகும் 

கணவன் வேலையில்லாது 
இருந்தால் மனைவி அவனை 
சட்டை செய்வது கிடையாது 

அவள் அவன் மீது பார்வையிலும் 
செயலிலும் நெருப்பை கக்குகிறாள் 

ஏதாவது நாட்பட்ட நோயின் காரணமாக
மனைவியின் அழகு குன்றிவிட்டால் 
கணவன் அவளை வெறுத்து ஒதுக்குகிறான்

நீங்கள் உண்மையான 
அன்பை இறைவனிடம் 
மட்டும்தான் காண முடியும் 

அவனுடைய அன்பு மாற்றம் 
என்பதையே அறியாதது.

உண்மையான பக்தி எது?

(இன்னும் வரும்)

3 comments:

  1. அன்புடன் ஆரம்ப தொடர் அருமை...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. //மனித அன்பு
    எல்லாம் கபடமானது

    இது வெறும் மிருக
    கவர்ச்சியே ஆகும்

    இது காமம்

    இது சரீர அபிமானமுள்ள
    சிற்றின்ப அன்பாகும்

    இது சுயநலத்தோடு
    கூடிய அன்பாகும்

    இது சதா மாறிக்கொண்டே
    இருக்கக் கூடியது

    இது எல்லாம் பகட்டும்
    வெளி வேஷமும் ஆகும் //

    கரெக்ட்டூஊஊஊ.

    ஆனால் அதில் தான் எல்லோரும் விட்டில் பூச்சிபோல போய் மாட்டிக்கொள்கிறார்கள். ஏதோ ஒரு கிக் உள்ளது போலிருக்கு..

    ReplyDelete