Tuesday, May 21, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(47)


தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(47)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(47)



இராமா! 

பக்தரைக் காப்பதில் உனக்கு நிகர் யார்?

இராமனே ! உனக்கிணை யார் உளர்?

பக்தரை காப்பதிலும் உன் புகழிற்கு 
இழுக்கின்றி நல்லோரை முறையாக 
காப்பாற்றுவதில் 
உனக்கு நிகர் எது?

பகைவனின் தம்பி என்பதையும் 
பொருட்படுத்தாமல் அவனுக்கு 
அபயம் அளித்தனை!

அவன் பக்தியை மெச்சி அவனுக்கு 
இலங்கை ராஜ்ஜியத்தினை அளித்தனை !

தேவராலும் மறையவராலும்
பூஜிக்கப்பெறுபவனே !
நாகம் மீது சயனம் கொண்டவனே!
தியாகராஜன் கொண்டாடும் இராமனே!
பக்தரை காப்பதில்
உனக்கு இணை யார் உளர்?
யாரும் இல்லை. 

கீர்த்தனை(388)
எவ்வரெ ராமைய நீ ஸரி ...
ராகம்-காங்கேய பூஷணி-(மேள-33)
தாளம்-தே-சாதி 

இந்த கீர்த்தனையில் பக்தனைக் காப்பதில்
இராமபிரானுக்கு இணை யாரும் இல்லை
 என்கிறார் ஸ்வாமிகள். 

அறியாமையினால் தன்னை இழந்து 
தன் கணவனால் சாபத்திற்கு 
ஆளாகி கல்லாய் கிடந்த அகலிகையாகட்டும் 


தன்னுடைய பகைவனின் 
தம்பி விபீஷணனாகட்டும்

படிப்பறிவில்லா 
வேடுவ பக்தை சபரியாகட்டும்,

யாராயிருந்தாலும் அவர்களின் 
குற்றம் குறைகளை ஆராயாது, 
அவர்களின் பக்திஒன்றியே கருத்தில் கொண்டு 
அபயம் அளித்தவன் ஸ்ரீராமபிரான் ஒருவன்தான். 

ஸ்ரீராமனிடம் பக்தி கொள்ளுபவர்கள் 
தங்கள் கடந்த காலத்தில் செய்த 
தவறுகளை பற்றியோ பாவங்களை பற்றியோ 
எதையும் சிந்தனை செய்யாமல் 
அவன் திருவடியே கதி என்று 
சரணடைபவர்களை அவன் ஒருபோதும்
காப்பாற்றாமல் அன்றும் விட்டதில்லை. 
விடுவதுமில்லை. 

பயத்தை போக்கவே வந்துதித்த
ஸ்ரீராமனிடம் பக்தி இருந்தால் போதும்
பயம் தேவையில்லை. 

அவனுடையநாமம்
பயத்தையும் போக்கும், 
பாவங்களையும் நீக்கும்
பரமபதத்தையும் அளிக்கும்.
என்பது சத்தியம். 

எனவே நித்தியம் நாம் எதை 
செய்ய மறந்தாலும் 
நமக்கு நினைவு உள்ளவரை. 
அவன் நாமத்தை மறக்காமல் 
ஸ்மரணம் செய்து வந்தால் போதும்.
 நமக்கு மரண பயம் இல்லை. 

Pic.courtesy-google-images 

4 comments:

  1. அவனுடையநாமம்
    பயத்தையும் போக்கும்,
    பாவங்களையும் நீக்கும்
    பரமபதத்தையும் அளிக்கும்.
    என்பது சத்தியம்.

    சத்தியமான கருத்துகளை அளித்து
    சாதித்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,கருத்துகளுக்கும் நன்றி.
      சத்தியத்தை சத்தியத்தைக் கொண்டுதான் அடையவேண்டும்
      அதற்கு ஒரே வழி சத்தியத்தை
      எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் கடைபிடிப்பதுதான்.

      Delete
  2. பழமையான படம் மிகவும் அருமை, அழகு.

    இன்றைய ரஸத்தில் ருசி அதிகம். நல்ல தெளிவான பன்னீர் ரஸமே தான்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. இன்றைய ரஸத்தில் ருசி அதிகம்.

    நீங்கள் சுவைத்து மகிழத்தான்

    நன்றிVGK

    ReplyDelete