Friday, May 10, 2013
சுவாமி சிதானந்தரின் சிந்தனைகள்.
சுவாமி சிதானந்தரின் சிந்தனைகள்.
சுவாமி சிதானந்தர் சுவாமி சிவானந்தரின் சீடராவார். சிவானந்தர் நிறுவிய தெய்வீக வாழ்க்கை சங்கத்தின் தலைவராக சுவாமி பொறுப்பேற்று ஆன்மீக பணியாற்றி சமீபத்தில் சமாதியடைந்தார். அவரின் சிந்தனைகளும் நடைமுறை வாழ்க்கையில் மனிதர்கள் ஆன்மீகத்தை கடைபிடிக்கும் வகையில் எளிமையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் சிந்தனையில்(பகுதி-1)
காலம் பறந்துகொண்டிருக்கிறது
இது நீங்கள் அனைவரும் நினைவில்
கொள்ள வேண்டிய விஷயம்
நாட்கள் வாரங்களாகவும் ,வாரங்கள்
மாதங்களாகவும் மாதங்கள்
வருடங்களாகவும் மாறுகின்றன
ஒவ்வொரு நாளும் நம் ஆயுள்
குறைந்துகொண்டே வருகிறது
ஆனால் நம் மனம் நம்மை படைத்த
இறைவனிடம் ஒன்றமுடியாத அளவிற்கு
கணக்கிலடங்கா விஷயங்கள் இரவும் பகலும்,
விழித்திருக்கும் நேரம் முழுவதும்
அதை திசை திருப்புகின்றன
இன்னும் சொல்லப்போனால்
அந்த நினைவுகள் நம் கனவிலும் நம்மை
ஆக்கிரமித்துக்கொண்டு நம்மை குழப்புகின்றன
இந்த கடினமான சூழ்நிலையில்
உங்கள் வாழ்க்கை இறை அனுபவம் ,
ஞான தெளிவு,முக்தி,பேரானந்தம் அமைதி மற்றும்
பூரணத்துவம் நிறைந்ததாக இருக்கும் என்று
நீங்கள் எப்படி எதிர்பார்க்கமுடியும்?
ஆனால் அதற்கும் ஒரு வழி
இருக்கத்தான் செய்கிறது.
என்றால் உங்களுக்கு
ஆச்சரியமாகக் கூட இருக்கலாம்.
ஆம் இருக்கிறது.
அதுதான் ஒருவர் எப்போதும் இறைவனையே
நினைத்துக்கொண்டிருந்தால் இவ்வாறு
நிகழக்கூடிய சாத்தியம் உண்டு.
ஒருவர் இறைவனைத் தவிர மற்ற
அனைத்து எண்ணங்களையும் மறந்திருக்கும்போதுதான்
இவ்விதம் நிகழ முடியும்.
அத்தகைய மனிதரின் வாழ்க்கையில்
இவ்வாறு நிகழ முடியும் என்பது மட்டுமல்ல
இறையருளைக்கொண்டு அவர் இப்பிறவியிலேயே ,
இங்கேயே இப்போதே இறையனுபவத்தை
பெறமுடியும் என்பதை உறுதியாக சொல்லமுடியும்.
எத்தனையோ மகான்கள் அதை
இந்த உலகத்திற்கு நிரூபித்துக்காட்டி
நம்மிடையே வாழ்ந்து இன்றும்
ஜோதியாக மனித குலத்திற்கு
வழி காட்டிகொண்டிருக்கிரார்கள்.
(இன்னும் வரும்)
Subscribe to:
Post Comments (Atom)
//ஒருவர் இறைவனைத் தவிர மற்ற அனைத்து எண்ணங்களையும் மறந்திருக்கும்போதுதான் இவ்விதம் நிகழ முடியும். //
ReplyDeleteஆஹா. மனதை இறைவனை நோக்கி ஒருநிலைப்படுத்த வேண்டும். நல்ல செய்தி. நல்ல பதிவு. நன்றிகள்.
நன்றி VGK
ReplyDeleteசிந்திக்க வேண்டிய கேள்வி...
ReplyDeleteஉணர வேண்டிய பதில்...
வாழ்த்துக்கள் ஐயா... நன்றிகள் பல...
நன்றி DD
ReplyDelete