தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள்(46)
இராமா என் மனம் உன்
திருவடிகளையே நாடுகிறது
கீர்த்தனை-(342)-ராமா நீபை-தநக-ராகம்-கேதாரம் -தளம்-ஆதி
தாமாரைக் கண்ணனான சீதாராம!
உன் மாய என்னவோ நான் அறியேன்
உன்மீதுள்ள என்னாசை என்றம் அகலாது
என் மனம் உன் திருவடிகளை நாடுவதும் ,
கண்கள் உன் திவ்விய வடிவத்தையே விரும்புவதும்
நான் கேட்கும் உன் திருநாமங்களை ஜபிக்க என் நாவு ஊறுவதும் உன் கருணையாலல்லவா?
களங்கமற்றவனே!
தாய் ,தந்தை , தோழர்கள்,மற்றோர், செல்வம்,பொன், குரு ,தெய்வம் ,முதலியன நீயே என்று நான் தினந்தோறும் கோரும் மொழிகளே என் அணிகளாகும்
போகங்களை நான் அனுபவிக்கும்பொழுதும் என் புத்தி உன்னிடமே லயிக்கிறது
இத்தியாகராஜன் இதயத்தில் பிரம்மானந்தம் பிறக்கிறது .
மிக அருமையான கீர்த்தனை ஒரு ராம பக்தன் கைகொள்ளவேண்டிய முறைகளை அருமையாக விளக்கியிருக்கிறார் ஸ்வாமிகள்.
பகவானின் கருணை இருந்தால்தான்
ஒரு பக்தனின் மனம் அவன் திருவடிகளை நாடும்.
அவன் திவ்விய வடிவத்தை விரும்பும்.
அவன் திருநாமங்களை ஜபிக்க
அவன் நாவு விரும்பும்.
அனைவரையும் பகவானின் வடிவங்களாக
கருதும் பிரம்ம பாவம் சித்திக்கும்.
எந்த செயலை செய்யும்போதும்,
போகங்களை அனுபவிக்கும்போதும்
அவன் புத்தி இறைவனிடமே லயித்து நிற்கும்.
இந்த அற்புதமான நிலையை
அடைய இராம பக்தன் பாடுபடவேண்டும்.
/// போகங்களை நான் அனுபவிக்கும்பொழுதும் என் புத்தி உன்னிடமே லயிக்கிறது ///
ReplyDeleteஉண்மையிலேயே பாடுபட வேண்டும் ஐயா...
சிறப்பான கீர்த்தனைக்கு நன்றி... வாழ்த்துக்கள்...
நன்றி..DD
Delete//பகவானின் கருணை இருந்தால்தான்
ReplyDeleteஒரு பக்தனின் மனம் அவன் திருவடிகளை நாடும்.//
ஆஹா, பகவான் நமக்கும் அத்தகைய கருணை செய்யட்டும்.
//எந்த செயலை செய்யும்போதும், போகங்களை அனுபவிக்கும்போதும் அவன் புத்தி இறைவனிடமே லயித்து நிற்கும். //
மகோன்னதமான நிலை !
//இந்த அற்புதமான நிலையை அடைய இராம பக்தன் பாடுபடவேண்டும்.//
சும்மா பாடுபட்டால் போதாது. படாதபாடு பட்டே ஆக வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி தீவிர தியானம் செய்தல் வேண்டும்.
கீர்த்தனையின் பொருள் அருமை தான். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
நன்றி வைகோ அவர்களே.
Deleteஉங்கள் சிந்தனைக்கு ஒரு பதிவு
படைத்துவிட்டேன்
இப்போதே பாருங்கள்.
பகவானின் கருணை இருந்தால்தான்
ReplyDeleteஒரு பக்தனின் மனம் அவன் திருவடிகளை நாடும்.
அவனருளாலே அவன் தாள் வணங்கி ...!
அவனருளாலே அவன் தாள் வணங்கி ...!
Deleteநம் மன இருள் நீக்கம் பெறவேண்டும்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி