தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள்(34)
பக்தரை காப்பவன்
இராமபிரான்.
பாற்கடலில்
விளையாடுபவனே!
எல்லையற்ற
கொடிய பாவங்களை யறுப்பவனே
கொடூரமான மாந்தரைதொலைவில்
வைப்பவனே!
மறைகளில் சஞ்சரிக்கும்
வடிவழகனே!
இந்திரனின்
எதிரிகளையழிப்பவனே!
சிவனால்
துதிக்கப்பெறுபவனே!
அடைக்கலம் புகுந்தவருக்கு
அந்தரங்கமாணவனே
ஜானகியின் சிருங்காரமென்னும்
தாமரையை வட்டமிடும்
வண்டு போன்றவனே
மன்னர் மன்னனாக
வேடம் தாங்கியவனே
கைகளில் அழகிய
அணிகளையுடையவனே
அரசரால் துதிக்கப்பெறுபவனே!
இன் சொல்லுடையவ்னே
தியாகராஜன் முதலிய
பக்தரை காப்பவனே!
(கீர்த்தனை-ஷீரசாகரவிஹார-(591)-ராகம் ஆனந்த பைரவி -தாளம்-ஜம்ப)
மிக இனிமையான் கீர்த்தனை-இந்த கீர்த்தனையை பாலமுரளி கிருஷ்ணா பாடி கேட்கவேண்டும். வீணையின் நாதத்துடன் அருமையாக இருக்கும்
அருமை...
ReplyDeleteபாலமுரளி கிருஷ்ணா அவர்களின் கீர்த்தனை பாடல் இணையத்தில் (mp3) ஏதேனும் உள்ளதா ஐயா...?
அருமையான பதிவு. பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDelete