Tuesday, April 30, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(33)


தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள்(33)




















இராமா !
இன்னும் உனது தயை
வராவிடில் நான் 
எப்படிப் பொறுப்பேன்?

உன் மீது ஆசைகொண்ட
என்னைக் காக்க பெரிய மனம்
வைத்து வாராயோ?

சீதை மணாளனே!

உத்தம குருவாக
வந்து பாலிப்பனே!

எவ்வளவென்று சகிப்பேன்?

இன்னும் வாராமலே இருப்பாயோ?

இவைஅனைத்தும்
சரியென்று மாந்தர் கூறுவாரோ?

நான் வேறு யாரை இரப்பேன்?

வேறு தெய்வங்கள் இலரோ?
பலர் உள்ளனர்

ஆயினும் அவர்கள்
 உன் போல் ஆவரோ?

துஷ்டரென்னும்  மேகங்களை
 கலைப்பதில் காற்றையொத்தவனே!

சிறந்த தனி தெய்வம் நீயே!

தாமரையை பழிக்கும் அழகிய 
கண்களை உடையவனே

கோவர்த்தனகிரியை தாங்கியவனே!

இரகுராஜ!

அச்சம் தவிர்ந்த
பக்தரால் சூழப்பெறுபவனே!

(கீர்த்தனை-இங்கா-தய-ராகுண்டே (535)-ராகம்-நாராயன் கௌள-தாளம்-ஆதி)

இந்த கீர்த்தனையில் ஒரு உண்மையான பக்தனின் 
மனம் படும் பாட்டினை தெள்ள 
தெளிவாக விளக்க்கின்றார் ஸ்வாமிகள். 


பக்தன் அனைத்தும் இறைவனே கதி  என்று 
இருப்பதால் எதற்கும் அஞ்சுவதில்லை .

ஒரு பக்தனுக்கு இறைஅருள் கிடைக்க 
தாமதம் ஆவது துன்பம் என்றாலும் 
பக்தனின் மனநிலை அறியாத 
இந்த உலக மாந்தர் அவர்களை
எள்ளி நகையாடும் துன்பம் 
அதைவிட கொடியது.

இருந்தாலும் உண்மை பக்தன் 
அவற்றை எல்லாம் பொருட்படுத்தாது 
இறைஅருள் பெறுவதை மட்டும் 
கருத்தில் கொண்டு மற்றவற்றை
தள்ளிவிடவேண்டும்  என்பது 
இந்த கீர்த்தனையின் மூல கருத்து.

3 comments:

  1. உண்மை பக்தன் இறை அருள் பெறுவதை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும்!//

    அருமை! பகிர்விற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  2. சிறப்பான விளக்கம் ஐயா... நன்றி...

    ReplyDelete
  3. //பக்தன் அனைத்தும் இறைவனே கதி என்று
    இருப்பதால் எதற்கும் அஞ்சுவதில்லை .//

    சூப்பரான கருத்து தான். மிக்க நன்றி

    ReplyDelete