Tuesday, April 9, 2013

தியாகராஜசுவாமிகளின் சிந்தனைகள் (6)


தியாகராஜசுவாமிகளின் சிந்தனைகள் (6)




ஸ்ரீராமா நீ என் முறையீடுகளுக்கு 
செவி சாய்க்க மாட்டாயோ?



























ஸ்ரீராமா உன் மகிமைகளை கேட்டு 
நான் உன்னை மிகவும் நம்பியுளேன்

காட்டில் திரியும் ஒருவன்(சுக்ரீவன்)
தன்னுடைய சகோதரன் இழைத்த 
துன்பத்தை பொறுக்க முடியாமல் முறையிட 
நீ அவன் கோரிக்கையை ஏற்று 
அவனை நீ காக்கவில்லையா?

(சம்சார காட்டிலே திரியும் தியாகராஜ சுவாமிகளின் 
மூத்த சகோதரர் அவருக்கு கொடுத்த 
தொல்லைகளை எவ்வளவு சாமர்த்தியமாக 
தன்னுடைய கோரிக்கையாக ஸ்ரீராமனிடம் 
தெரிவிக்கிறார் என்பது ரசிக்கத்தக்கது)

உனக்கு அவனின் கோரிக்கைதான் 
முக்கியமாக பட்டதா? 
என்னுடைய கோரிக்கை 
உனக்கு ஏற்க இயலாததா
என்று ஆதங்கப்படுகிறார். ஸ்வாமிகள் 

இரவில் திரியும் அரக்கனொருவன்(விபீஷணன்)
தன்   அண்ணன் (இராவணன்)
கூறிய வார்த்தைகளை பொறுக்க முடியாமல்
'ராமா நீயே சரணம்'என்று முறையிட 
அவனுடைய பேச்சு மட்டும் 
கிளி மொழியைப்போல்(சுகரின் பாகவதத்தை போல்)
உனக்கு விபீஷணனின் பேச்சு 
மட்டும் இனிமையாக இருந்ததோ ?

(எங்கே ராமன் காலத்தில்சுகர் வந்தார்,
அவர் பாகவதம் வந்தது என்று எண்ண வேண்டாம்  
சுகரின் பாகவதம் மிகவும்  இனிமையானது 
மனதின் தாபத்தையும் மனிதர்களின் பாவத்தையும் 
போக்கடிக்கவல்லது என்பதை நமக்கு 
ஸ்வாமிகள் உணர்த்துகிறார்)

என் பேச்சு மட்டும் அதுபோல் 
இனிமையில்லையோ 
என்று வருத்தப்படுகிறார்

பொன்மணிகளை நூலில் கோத்ததுபோல் 
உன்னை இடைவிடாது துதிக்க ஆசைகொண்டவன்  
இந்த அடியவன் தியாகராஜன் என்று 
தெரிந்திருந்தும் என் முறையீட்டை 
கேளாமல் இருக்கலாமா என்று
தன் தெய்வத்திடம் முறையிடுகிறார். 

இறைவனை அடைய அவனை 
நாம் இடைவிடாது துதிக்க வேண்டும் 
என்பது இந்த பாடலின் கருத்தாக அமைகிறது

மணிகள் தனியாக இருந்தால் 
சிதறிபோகும்.

நாம் சத்சங்கத்தில் இணையாமல் இருந்தால் 
நம் மனம் சிதறிபோகும். 

மாலையில்  கோர்க்கப்பட்டபின் மணிகள் 
சிதறாமல் ஒன்றாக நன்றாக இருக்கும்.

ஒரு மாலையில் நூலில் கோர்க்கப்பட்ட 
உள்ள மணிகளைபோல் நம் மனமும் 
இறைவனை விட்டு அகலாது 
பிணைக்கப்பட்டிருக்கவேண்டும் 
அதற்க்கு இடைவிடாது சத்சங்கத்தில்
நாம் இணைந்திருக்கவேண்டும். 

தியாகராஜ சுவாமி-கீர்த்தனை-352-நா மொறால-ராகம்-தேவகாந்தாரி-தாளம்-ரூபகம்)
.

2 comments: