தியாகராஜசுவாமிகளின் சிந்தனைகள் (7)
வாயு குமாரனே!
(இராமனின் )
திருவடித் தாமரைகளின்
கைங்கர்யம் எனக்கு கிடைக்குமா?
பன்முறை அதை அனுபவித்து
பிரம்மானந்தம் அடையும்
பக்த சிகாமணியே!
(அந்த தொண்டு
எனக்கும் கிடைக்குமா?
அதிகாலையில் எழுந்து
அனைத்தையும் உன் கையில் ஒப்படைத்து
லக்ஷ்மிபதியாகிய பகவான் அமிர்தமயமான
திருமஞ்சனம் செய்துகொண்டு
நெய்வேத்தியங்களை ஸ்ரீ ரங்கநாதனுக்கு
அர்ப்பணம் செய்து.சீதாதேவி
தனது திருக்கரங்களால் பரிமாறிய
போஜனத்தை அருந்தி
உன்னை சாத்வீக குணங்களை
விருத்தி செய்யும் புராணங்களை
படிக்குமாறு கூறியவனும் ,
சகலத்திற்கும் ஆதாரமானவனும் ,
பிரசித்தமான தியாகராஜனால்
வணங்கப்படுபவனான
அயோத்தி மன்னனின் பாத சேவை
எனக்கும் கிடைக்குமா?
ஸ்வாமிகள் ஒரு ராம பக்தன்
எதை நாட வேண்டும் என்பதை
இந்த கீர்த்தனத்தில் தெளிவாக காட்டுகிறார்
.
(கீர்த்தனை-கலுகுநா பத நீரஜசேவ-(99)ராகம்-பூர்ண லலிதா -தாளம் ஆதி )
அனுமனை அனுதினமும் நினைக்க வேண்டும்... அருமை ஐயா... நன்றி...
ReplyDeleteஅனுமனை நினைத்தால்
Deleteராமனையும் நினைப்போம்