Tuesday, April 23, 2013
தியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(18)
தியாக ராஜ சுவாமிகளின்
சிந்தனைகள்(18)
இறைவன் இசை வடிவானவன்.
மனமே!
வேதம் புராணம்,
ஆகம சாத்திரங்கள் இவற்றிற்கு
ஆதாரமான நாதமெனும்
அமுதரசமே இவ்வுலகில்
மானிட உருவத்துடன்
அவதாரமெடுத்தது
ஏழு சுரங்களும்
(வில்லில் கட்டப்பெற்ற
சிறு மணிகளாகும்
சிறப்புற்ற ராகமே
கோதண்டமென்ற வில்,கனம்
,நயம், தேசியம் ஆகிய
மூவகை வேறுபாடுகள்
அவ்வில்லின் நாண் கயிறாகவும் ,
தாள கதிகள் அம்புகளாகவும்
,ரசம் நிறைந்த சங்கதிகள்
சமயத்திற்கு உசிதமான
மொழிகளாகவும் அமைவன.
தியாகராஜன் சேவிக்கும்
நாதரூபமான இவ்வவதாரத்தை
பஜனை செய்வதே
நமது பாக்கியம் ஆகும்.
(கீர்த்தனை(333)-நாத ஸுதா-ராகம்-ஆரபி
-தாளம்-ரூபகம்)
நாத யோகியாகிய
தியாக ராஜ ஸ்வாமிகள்
ஸ்ரீ ராமனை
இசை வடிவமாகவே
காண்கிறார்.
மிக அருமையான
கீர்த்தனை-)
இறைவனை
நாத வடிவாகவே
பஜிக்கின்றனர்
இசை நுட்பம்
அறிந்த மகான்கள் )
இசைக்கு எளிதில்
வசப்படும் இறைவனை
இசையால் துதித்து
இன்பம் அடைவோமாக.
இசை பற்றி
ஒன்றும் தெரியாதவர்களும்
இசையை கேட்டு
இன்புறுவதில்
இன்பம் காணலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
விளக்கம் அருமை...
ReplyDeleteசிறப்பான கீர்த்தனை...
நன்றி ஐயா...