Sunday, April 14, 2013
ராமாயணம்-பகுதி-3
ராமாயணம்-பகுதி-3
சீதை யார்?
சீதை ஜீவாத்மா
அது இறைவனை
(ராமனை) அடைகிறது
இறைவனோடு இருந்தாலும்
ஆத்ம ஞானம் இல்லாவிடில்
இறைவனுடன் இருந்தும் சம்சார
தொல்லைகளிலிருந்து விடுபடமுடியாது.
இந்த நிலை மனிதர்களுக்கு
மட்டுமல்ல இந்த அறியாமை
தெய்வங்களுக்கும் ,
தேவர்களுக்கும் ,
சக்தி வாய்ந்த அசுரர்களுக்கும்
பொருந்தும்.
எப்படி என்றால் ந்ம்மை
எல்லாம் படைக்கும் சக்தியை
பெற்ற பிரம்ம தேவர் தான்தான்
எல்லாவற்றையும் செய்கிறேன்
என்று அகந்தை கொண்டார்.
அந்த அகந்தையினால்
தன்னை படைத்த
நாராயணனையே
அவர் மறந்து போனார்.
அவர் அகந்தையை அடக்க
நாராயணன் அசுரர்களை அனுப்பி
அவரிடமிருந்த வேதங்களை
அபகரிக்க வைத்தார்.
அப்போதுதான் அவர்
தன்னுடைய இயலாமையையும்
அறியாமையையும் உணர்ந்தார்.
நாராயணனை சரணடைந்து
தன்னை காப்பாற்ற வேண்டினார்.
நாராயணனன்.மீனமாக
அவதரித்து வேதங்களை
மீட்டு கொடுத்தார்.
இருந்தாலும்
அஞ்ஞானம் அவ்வளவு
சீக்கிரத்தில் அழியாது .
மீண்டும் அவருக்கு
கர்வம் தலைக்கேறியது.
அதை அடக்க ஞான பண்டிதனான
முருகன் அவரை சோதனை செய்தான்.
ஓம் என்ற பிரணவ மந்திரத்தின்
பொருளை விளக்குமாறு கேட்டான்.
பிரம்மன் விழித்தான் .
சிறைப்பட்டான்.
பிறகு தன் அறியாமை உணர்ந்து
தாள் பணிந்தான்
தன் பதவியை மீண்டும்
பெற்று தன் கடமையை
ஆற்ற தொடங்கினான்.
ஆனால் அஞ்ஞானம் என்பது
வெட்ட வெட்ட மீண்டும்
துளிர்க்கும் மரம்.
அதன் வேரை அழிக்காவிடில்
அது மீண்டும் செழித்து வளர்ந்து
நம்மை மீண்டும் துன்பத்தில்
ஆழ்த்திவிடும் .
அதுதான் மீண்டும்
அவன் வாழ்வில் நிகழ்ந்தது.
(இன்னும் வரும்)
Subscribe to:
Post Comments (Atom)
அஞ்ஞானம் பற்றிய விளக்கம் அருமை... தொடர்கிறேன் ஐயா...
ReplyDeleteநன்றி DD
Deleteதொடர்ந்து கொண்டிருக்கிறேன்
ReplyDeleteநன்றி
Delete