இறைவனையே எப்போதும்
நினைக்கின்றவனுக்கு
இன்னல் எது?
நம் ஆன்மா வசிக்கும் உடலோ
தோன்றிய நாள் முதல்
சிதைந்து உருமாறி ஒருநாள் முழுவதும்
அழிந்து மறைந்து விடும் தன்மை கொண்டது.
அதை இயக்கும் மனமோ கணத்திற்கு
கணம் மாறும் எண்ணங்களை உடையது.
நாம் வசிக்கும் உலகமும் அப்படியே
உண்மை இவ்வாறிருக்க என்றும்
மாறாத தன்மை கொண்ட ஆன்மாவாகிய
நாம் உண்மையை உணராது
இவ்வுலகில் உழைப்பதும் உண்பதும்,
உறங்குவதும் உறவுகொள்வதுமாக
வீணே கழித்துக் கொண்டிருக்கிறோம்.
கூற்றுவன் இதற்க்கு
முற்றுபுள்ளி வைக்கும்போது
அலறுகிறோம் ,அழுது அரற்றுகிறோம்.
இதிலிருந்து தப்பிக்க எளிதான வழியிருந்தும்
அதை நாடாமல் ,இறைவனின் நாமங்களை
பாடாமல் வாடி வருந்திக்கொண்டிருக்கின்றோம்
மனதின் இயல்பு
ஏதாவது ஒன்றை
பற்றியிருத்தல்
உலக பொருட்களையோ
உறவுகளையோ பற்றினால்
இடைவெளியில்லா துன்பமும்
அதன் இடையிடையே வரும்
ஒரு சில துளி இன்பமும்
அதே மனம் இறைவனின்
அழகிய திருவடிவை கண்டு
அவன் இரு திருவடிகளை பற்றினால்
நம்மை விட்டகன்றிடும்
பிறப்பிறப்பென்னும் தொற்று
அவன் வடிவத்தை
மனதில் நிறுத்தி
அவன் நாமத்தை
எண்ணத்தில்
வைப்பவருக்கு
வேறு சிந்தனைகள் வாரா
தன்னை நினைப்பவனைதான்
கூற்றுவன் பாசகயிற்றினால்
பற்றி இழுத்து செல்கின்றான்
அவனை நினையாது
இறைவனையே
நினைக்கின்றவனுக்கு
அவன் இன்னல்
விளைவிப்பதில்லை
.
உண்மையான வரிகள்...
ReplyDeleteமறந்தால் தானே நினைப்பதற்கு...?