Friday, April 19, 2013
கீதை சிந்தனைகள்
கீதை சிந்தனைகள்
பகவான் கண்ணனின் கீதையை
மகாத்மா காந்தி
கீதை அன்னை என்றே
அழைத்தார்.
அவர் தனக்கு எப்போதெல்லாம்
மன சோர்வு
ஏற்பட்டதோ அப்போதெல்லாம்
கீதை அன்னைதான்
தனக்கு வழி காட்டினாள்
என்று கூறியிருக்கிறார்
அவர் தினமும்
நூற்றுக்கணக்கான கீதை ஸ்லோகங்களை
எவ்வாறு மனப்பாடம் செய்தார்?
மிக எளிதான முறையில்
தினமும் ஒரு ஸ்லோகத்தை
காலையில் பல் துலக்கும்போது எதிரே சுவற்றில் எழுதி
வைத்து விடுவாராம். அப்படியே அனைத்து
சுலோகங்களையும் மனப்பாடம் செய்துவிட்டதாக
தன் சுய சரிதையில் கூறியிருக்கிறார்.
கீதையை முழுவதும்
மனப்பாடம் செய்து ஒலிப்பதிவு
கருவிபோல் ஒப்பிப்பதில்
பயனேதும் இல்லை.
கீதை புத்தகத்தை வைத்து
பூஜை செய்வதாலும் எந்த பயனும் இல்லை.
கீதையை கரைத்து
குடித்து விரிவுரைகள்
செய்வதாலும் பயன் இல்லை.
அதில் உள்ள கருத்துக்களை
நம் மனதில் பதித்துக்கொண்டு
அதன்படி நம் வாழ்க்கையை
வாழ்தல் வேண்டும்
அப்படி செய்தால் எந்த துன்பமும்
நம்மை பாதிக்காது
வாழ்க்கையின் பல நிலைகளின்
நம் மனதில் எழும் குழப்பங்களுக்கு
கீதை தீர்வு காட்டுகிறது.
நம் மனதில் வாழ்வின்
ஒவ்வொரு கால கட்டத்திலும்
பலவிதமான பிரச்சினைகளை சந்திக்கின்றோம்.
என்னதான் படித்திருந்தாலும்
,பிரச்சினைகளை பற்றி நன்கு அறிந்திருந்தாலும்
அதை தீர்க்க முடியாமல் தடுமாறும் நிலைமை
ஒவொருவருக்கும் நிச்சயம் வரும்
அதுஇல்லறத்தானுக்கும் சரி,
துறவு வாழ்க்கை மேற்கொண்டவர்களுக்கும் சரி.
அந்நிலையில் நமக்கு சரியான உறுதியான
வழியை காட்டும் பகுதிகள் கீதையில் உள்ளன
கீதைக்கு ஏராளமான உரைகள் உள்ளன
மூன்று மதாச்சாரியர்களும்,மற்றும்
பல மகான்களும் கீதைக்கு அவரவர்
உணர்ந்த வகையில் உரை எழுதியிருக்கிறார்கள் .
ஏன் மகாத்மா காந்தியும்
உரை செய்திருக்கிறார். அந்த புத்தகத்தில்
பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் ,மற்றும்
திருவள்ளுவரின் குறள்களின் விளக்கமும்
சேர்ந்து அமைந்தள்ளது அற்புதம்.
(குஜராத் நவஜீவன் புத்தக தமிழ் வெளியீடு)
ஒரே பக்கத்திலும் விளக்கம் உண்டு
பல ஆயிரம் பக்கதிலும் விளக்கம் உண்டு.
எல்லோராலும் கீதை முழுவதையும்
படித்து விளங்கி கொள்ளல்
அரிதினும் அரிது.
இவ்வளவு பெரிய கீதையின் சாரத்தை
இரண்டே வரிகளில் நமக்கு
ஒருவர் வழங்கியிருக்கிறார்
அந்த இரண்டு வரிகளில் விளக்கத்தை
தந்த மேதை யார்?
அவர்தான் சுப்பிரமணிய பாரதியார்
அது என்ன தெரியுமா?
"பக்தி பண்ணி பிழைக்கசொன்னான்-பலனை எண்ணாமல் உழைக்க சொன்னான்
எப்படி ?
Pic.courtisy-googleimages.
Subscribe to:
Post Comments (Atom)
/// எல்லோராலும் கீதை முழுவதையும் படித்து விளங்கி கொள்ளல் அரிதினும் அரிது. ///
ReplyDeleteஉண்மை தான் ஐயா...
முழுவதையும் படிக்க வேண்டிய தேவையும் இல்லை ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கானோர் படித்து . அதன் சாரத்தை வெளியிட்டுள்ளனர். நமக்கு தேவையானதை மட்டும் கிரகித்துக்கொண்டு பயனடைந்தால் போதும்
Delete