தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (11)
இராமபிரானின் அருள் பெறாதவர்
என்ன செய்து என்ன பயன் ?
காமம் ,மோஹம்
முதலியவைகளுக்கு அடிமைகளாகி
ஸ்ரீராமனின் நியமத்தை அறியாதவர்களும்
அவனுடைய அருளுக்கு
பாத்திரமாகாதவர்களும் இவ்வுலகில்
என்ன செய்து பயனென்ன?
யாகம் செய்தும் செல்வ மிகுதியால்
புத்திரன் பிறந்த நாள் விழா கொண்டாடியும்
குழந்தையில்லாமையால்
பிறர் வீட்டுக் குழந்தையை ச்வீகாரம்
எடுத்துக்கொண்டும் என்ன பயன்?
மெத்தை வீடு கட்டியும் அதில்
விளக்குகள் பொருத்தியும் மாதரை
வசப்படுத்தியும் என்ன பயன்?
மாளிகை அமைத்தும்,
ஆபரணங்கள் அணிவித்தும்
மதன விளையாட்டை
அறிந்தும் என்ன பயன்?
ராஜ்ஜியம் ஆண்டும்
பல ஜனங்களால் போற்றப்பட்டும்
,கையில் நெய் வழிந்தோடுமாறு
உணவளித்தும் என்ன பயன்?
தாமே குருவாக ஆகியும்
கண்ணிற்கு தம் உடல் பருத்ததாக
தோன்றியும்,மந்திரங்களை
பிறருக்கு உபதேசம் செய்தும்
என்ன பயன்?
நன்மையளிப்பவனும் ,
இணையற்றவனும் தாமரை கண்ணனும்
பூசிக்கதக்கவனுமாகிய
இராமபிரானின் அருள் பெறாதவர்
என்ன செய்தும் பயன் என்ன?
(கீர்த்தனம்-ஏமி சேஸி தேமி ஸ்ரீராம (22)-ராகம் தோடி-தாளம்-சாபு )
இந்த உலகில் என்ன செய்தாலும்,
எப்படி வாழ்ந்தாலும் இராமபிரானை வணங்கி
அவன் அருளை பெறாவிடில்
அனைத்தும் வீண் என்கிறார்
தியாகராஜ ஸ்வாமிகள்
சிந்திக்க வேண்டிய கேள்விகள் ஐயா...
ReplyDeleteநன்றி...