தியாகராஜசுவாமிகளின் சிந்தனைகள் (9)
மனதை அடக்க
சக்தியில்லாமல் போனால்
இனிய மணியோசையுடன் கூடிய
மலர்ப்பூஜையினால் என்ன பயன்?
கனத்த அகந்தையுடன்
ஒருவன் நீராடினால்
காவேரியும் கங்கையும்
அவனை எப்படி காக்க முடியும்?
சோம யாகம் செய்பவனின்
மனைவி பிறரிடம் இன்ப வாழ்க்கைக்கு
ஆசைப்பட்டால் சோமயாஜி
சொர்க்கத்திற்கு தகுதிள்ளவனானா?
உள்ளம் முழுவதும்
காமமும், குரோதமும்
நிறைந்தவன் தவம் புரிந்தால்
அத்தவம் அவனைக்
காத்து இரட்சிக்குமா?
(கீர்த்தனை- மநஸு நில்ப (145)-ராகம்-ஆபோகி -தாளம்-ஆதி )
இந்த கீர்த்தனையில்
பூஜை செய்வதற்கு மனம்
பிற விஷயங்களை
எண்ணாது இறைவனின் மீது
முழு நாட்டத்துடன்
இருக்கவேண்டும்
என்று வலியுறுத்துகிறார்
அவ்வாறு செய்யாமல் பல ஆண்டுகள்
பூஜை செய்தாலும் ஒரு பயனும்
ஏற்படாது என்பது இதன் பொருள்
அடுத்து தெய்வீக நதிகளில்
நீராடும்போது மனதில்
அகந்தையற்று,
பக்தியுடன், பணிவுடன்
நதிதேவதைகளை வணங்கி
நீராடுவோர் மனதில் உள்ள பாவங்கள்
கரைந்து மனம் பரிசுத்தமாகிவிடும்
என்று தெரிவிக்கிறார்.
அவ்வாறு செய்யாதவர்கள்
நதிகளில் நீராடியும் உடல் அழுக்குத்தான்
நீங்குமே ஒழியே அவர்களின்
அக அழுக்கு அப்படியேதான் இருக்கும்
என்பது இந்த கீர்த்தனையின் பொருள்
(தற்காலத்தில் உடலில் உள்ள அழுக்குகளும் போகாது. மேலும் அழுக்குகள் வந்து நம்மிடம் ஒட்டிக்கொள்ளும் நிலையுள்ளது. அதைப்போக்க நாம் வேறு நீரை விலைக்கு வாங்கி குளிக்கவேண்டும்.அதற்க்கு சோப்பு வேண்டும்.
கழுவினால் போகாது.அந்த அளவிற்கு நதிகள் முழுவதும் சாக்கடைகளாகிவிட்டது.
இன்னும் பல இடங்களில் நதிகளில்
நீர் இல்லாமல் வரண்டுபோய்விட்டன.
சில இடங்களில் நதிகளே
காணாமல் போய் விட்டன.
யாகம் செய்வதற்கு இல்லறத்தை
நல்லறமாக செய்யும் ஒழுக்கமான
பத்தினி இருக்கவேண்டும்.
ஆனால் தவறான வழியில்
செல்லும் மனைவியை அருகில்
வைத்துக்கொண்டு ஒருவன்
செய்யும் சோம யாகம்
பலன்தராது என்கிறார்.
முடிவாக காமமும் சினமும்
நீங்கத்தான் தவம் மேற்கொள்ளுவர்.
ஆனால் ராவணன், ஹிரண்யகசிபு
போன்றவர்கள் மனதில் காமமும்
கோபத்தை வளர்த்துக்கொண்டு
தவம் புரிந்ததால் பல தீய வினைகள்
புரிந்து கொடுமையான மரணம் அடைந்தனர்.
எனவே தவம் மேற்கொள்ளுபவர்கள்
காமம் சினம் முதலிய தீய குணங்களை நீக்கி
சத்வ குணத்தில் நின்று தவம் புரிந்தால்
இறைவனருளை எளிதில் பெற்று
இன்புறலாம் என்பது இந்த
கீர்த்தனையின் பொருள்.
சிந்திக்க வேண்டிய கேள்விகள்... நல்ல விளக்கங்கள்...
ReplyDeleteஅருமை ஐயா... நன்றி...
நன்றி..
Delete