Friday, April 12, 2013

மனதிற்கு உபதேசம்.


மனதிற்கு உபதேசம். 

பிறருக்கு தீதை விளைவிக்கும் 
தீய செயல்களை 
எண்ணாதிரு மனமே 

கட்டுப்பாடின்றி செல்லும் 
மனதினை திருத்தி 
கடமையில் குறியாய் இரு தினமே 

தன் நலன் மட்டும்என்றும் 
நாடாது பிறர் நலமும் நாடும் 
பண்பினையும்  கைக்கொள்வாய் மனமே 

நொடிக்கொருதரம் மாறுகின்ற மனம் 
நம் வாழ்வை நாசம் செய்துவிடும் என்பதை
அறிந்து தெளிந்திடுவாய் மனமே 

காண்பதனைத்தும் உன்வடிவம் 
என்ற உண்மையை உணர்ந்து 
அனைத்துயிரின்  மீதும்
அன்பு செய்வாய் மனமே 

வாழ்வில் உயர்வுற்றபோதும்,
வளம் நீங்கி தாழ்வுற்றபோதும் 
வாடாமலற்போல் என்னுள்ளம்
நீ எனக்கு அளித்ததை 
மகிழ்வுடன் ஏற்கும் 
பக்குவம் அளிப்பாய் 
என் அன்பு இறைவனே 

எல்லாம் உன் செயல் என்றும்.
என்னுள்ளிருந்து இயக்கும் சக்தி 
நீயென்று அறிந்துகொண்டு 
என்றும் இன்பமாய் வாழும் 
உயர்நெறியை கைகொண்டு 
வாழும் உத்தம வாழ்வை 
தந்தருள்வாயே. 

உள்ளத்தில் அகந்தை கொண்டு 
விலங்குகள்போல் வாழாமல் 
சிந்தையில் அன்பு தேக்கி 
உன்னை ஒவ்வொரு கணமும் 
நினைந்து வாழும் உத்தம பண்பை 
இறைவா எனக்கு அருள்வாயே.  
 

பகைவனுக்கருள் செய்வாய்  
நன்னெஞ்சே 
அந்த பகைவனுள்ளதிலும் 
அன்புருவான் பரமன் 
வாழ்கின்றான் 
என்ற பாரதியின் வரிகளை
கருத்தில் கொண்டு 
இன்ப நிலையை 
தானாகவே தந்திடும் 
அன்பர் பணி செய்ய  
இறைவா என்னை 
ஆளாக்கி விடுவாயே 



  

No comments:

Post a Comment