அத்திகிரி அருளாளன்.
பிரம்மனும்
ஆராதித்த பேரருளாளன்
பிரம்மன் வளர்த்த
யாக அக்னியில்
தன்னை தோற்றுவித்துக்கொண்டு
தன பக்தர்களுக்காக
எதை வேண்டுமானாலும்
செய்ய தயங்காத
பக்த வத்சலன்.
அத்திகிரி மலைமேல்
நின்றுகொண்டு
தன்திருவடிகளை
பற்றும்பக்தர்களின்
துன்பங்களை
முற்றும் அகற்றுபவன்
திருக்கச்சி நம்பிகளோடு
நேரில் உரையாடியவன்
ராமானுஜரை
ஆட்கொண்டவன்.
குருவிற்காக தன்
கண்களை இழந்த
கூரத்தாழ்வானுக்கு
பார்வையை மீட்டு கொடுத்தவன்
திருவேங்கடத்தில் உறையும்
வெங்கடேச பெருமானின் கோயிலில் உள்ள மணியின் அவதாரமாக
தோன்றிய வேதாந்த தேசிகனை
ஆட்கொண்டவன்.
வணங்குபவர்களுக்கு
கேளாமலேயே
வரங்களை அள்ளி தருபவன்.
உலகம் போற்றும் உத்தமன்.
அப்படிப்பட்ட எம்பெருமான்
காஞ்சியில்
உறைகின்றான்.
பாரோர் புகழ
உற்சவம் பல காண்கின்றான்
அடியார்களின்உள்ளம் குளிர.
தினமும் திருவிழாதான்
அவன் கோயிலில் .
முக்தி. தரும் நகறேழில்
முக்கியமாம் காஞ்சி
என்கிறது சாத்திரங்கள்
கழுதைமேய்த்தாவது
காஞ்சியிலே வாசம் பண்ணு
என்பார்கள்.
காஞ்சிபுரத்தில்
குடிகொள்ளாத
தெய்வங்களே இல்லை
அது ஞானம் விளைந்த பூமி
மகான்கள் தேடி சென்று
வாசம் செய்த புண்ணிய தலம்
கழுதைமேய்த்தாவது
காஞ்சியிலே வாசம் பண்ணு
என்பார்கள்.
நான் 8 ஆண்டுகாலம்
அங்கு வாசம் பண்ணினேன்.
கழுதைபோல ஒன்றும் அறியாது
நான் உண்டு என்
வேலை உண்டு என்று
வரதராஜ பெருமானை
வரைய வேண்டும் என்று
45 ஆண்டு கால ஆசை.
அது இப்போதுதான் கை கூடியது.
அந்த படம் இதோ.
.
45 ஆண்டு கால ஆசை அற்புதமாக, அழகாக, அருமையாக வந்துள்ளது ஐயா... பாராட்டுக்கள் பல... வாழ்த்துக்களும் பலப்பல... நன்றி...
ReplyDeleteநன்றி... DDsir
Delete