ஜேஷ்டா தேவி
யார் இந்த ஜேஷ்டா தேவி?
மக்களிடையே ஒரு தவறான நம்பிக்கை
பரவி அது அவர்களின் மரபணுவில் பதிந்துவிட்டது
அயிஸ்வர்யத்தை வாரி வாரி வழங்கும்
இலக்குமி தேவியின்
மூத்த சகோதரி ஜேஷ்டா தேவி
என்றும் அதாவது மூதேவி என்றும்
அவள் வீட்டில் இருந்தால்
அனைத்தும் நாசம்
என்றும் கதை கட்டி விட்டு விட்டனர்.
முப்பெரும் தேவி என்றும்
மூன்று சக்திகளும் இணைந்த
மூன்று தேவி என்றிருந்தவள்
காலப்போக்கில் மூதேவி என்று
நாமம் சூட்டப்பட்டு
தரித்திரத்தை தருபவள்
என்று ஓரங்கட்டப்பட்டுவிட்டாள்
என்றால் அது மனித குலத்தின்
துரதிஷ்டவசமே
என் செய்வது?'
குழந்தையும் தெய்வமும்
கொண்டாடும் இடத்திலேதான்?என்பது
தெய்வங்களுக்கும் பொருந்தும்
குழந்தை கண்ணனை கொண்டாடுகிறோம்,
குழந்தை விநாயகனை கொண்டாடுகிறோம்,
குழந்தை முருகனைகொண்டாடுகிறோம்
சிறுமியாக லலிதையின் அம்சமாக
பாலாவை கொண்டாடுகிறோம்.
இன்று கிறித்துவர்களும் குழந்தை இயேசு
என்று கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆனால் பாவம் முப்பெரும்தேவியாக
சர்வ சக்தி படைத்தவளாக விளங்கும்
ஜேஷ்டாதேவிக்கு
ஏன் இந்த நிலை?
ஆனால் உண்மை எத்தனை
காலம் மறைந்து வாழும் ?
இன்று அவளுக்கு
விடிவு காலம் பிறந்துவிட்டது
பலஆயிரம் ஆண்டுகளுக்கு
முன் அவள் வழிபாடு இருந்திருக்கிறது.
சமீபத்தில் ஆலயம் கண்டேன்
வலைப்பதிவில் ஒரு பாழடைந்த
சிவ ஆலயத்தை
பற்றிய கட்டுரை வெளியாகிஉள்ளது.
அதில் ஜேஷ்டாதேவி சிலை உள்ளது
அதைகண்டதும் ஜேஷ்டாதேவி
பற்றிய விவரங்களை தேடியதில்
ஜேஷ்டாதேவி பற்றிய
ஏராளமான தகவல்கள்
உள்ளதை கண்டேன்.
நாம் அஷ்ட தரித்திரங்களை
பற்றிதான் கேள்விப்பட்டிருக்கிறோம்
ஆனால் இந்த தேவி 64 விதமான
தரித்திரங்களை
நாசம் செய்பவள் என்றும்.
இலக்குமி தேவி அளித்த செல்வதை
காப்பாற்றி கொடுக்கும் சக்தி படைத்தவள் என்றும்
அவளின் வழிபாடு ஒரு தனி மனிதருக்கும்
ஒரு நாட்டிற்கும் இன்றியமையாதது
என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
மேலும் அவள் கோயில் கொண்டுள்ள
தலங்கள்,வழிபாட்டு முறைகள்
தெளிவாக விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
வலையுலக அன்பர்கள் மேற்கண்ட
வலைதளங்களுக்கு சென்றுதகவல்களை
அறிந்துகொண்டு பயன் பெறுமாறு
அன்புடன் வேண்டுகிறேன்.
.
விளக்கங்களை இன்று தான் அறிந்து கொண்டேன்... நன்றி ஐயா...
ReplyDeleteநல்லதொரு தள அறிமுகத்திற்கும் நன்றி...
நன்றி உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.
Deleteஏராளமான பயனுள்ளஆன்மீக தகவல்கள்
இந்த தளத்தில் உள்ளன.
மேலும் இன்னோருதகவலையும்கூறுகிறேன்
ReplyDeleteயாரொருவரின் பிறந்தகரணம்
தைதுலமாக இருக்கிறதோ
அவர்கள் ஜேஷ்டாதேவியைபின்பற்றினாலோவழிபட்டாலோ அபரிமிதமானபலன்கள்கிடைக்கும்
இதுஅனுபவவிதி. சந்தேகமிருப்பின் அணுகவும் இதுபோலஒவ்வோர்கரணத்திற்குமுண்டு இதுதான்கரணம்தப்பினால்மரணம்என்பதினடிப்படை
8778766319
நன்றி.தகவலுக்கு. 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பதிவில் ஒரு கருத்து வந்துள்ளது. பொதுவாக வலையில் இதுபோன்ற நன்மை தரும் பதிவுகளை காண யாரும் ஆர்வம் காட்டுவதில்லை
Deleteகாஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஆமுர் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் ஜேஷ்டாதேவிக்கு சிலை உள்ளது
ReplyDelete