Sunday, April 28, 2013

இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்குவான்


தாள்சடையானுக்கும் நீள் முடியானுக்கும் 
இடம் கொடுப்போம்.
சங்கடங்கள் இல்லாமல் வாழ்வோம். 





இடத்தை கொடுத்தால்
மடத்தை பிடுங்குவான் 
என்று ஒரு பழமொழி உண்டு

உடனே எல்லோரும் நினைப்பது
என்னவென்றால்
ஒரு தீயவனுக்கு நாம் இரக்கம் காட்டி
நம்முடைய இடத்தை கொடுத்தால்
காலபோக்கில் அவன் நம்
இடத்தைபிடித்துக்கொண்டு நம்மையே
அந்த இடத்திலிருந்து துரத்திவிடுவான்
என்ற நோக்கில் பொருள் கொள்ளப்பட்டுவிட்டது

ஆனால் அவர்கள்
அவ்வாறு நினைப்பதில் தவறில்லை.

ஏனென்றால் இன்றைய உலகில்
அதைப்போல மனிதர்கள்தான் அதிகம்.

உதவி செய்யப்போய் உபத்திரவத்தில்
மாட்டிக்கொண்டு அவதிப்படுபவர்களை பார்க்கும்போது
உதவும் மனம் கொண்டவர்கள் கூட சற்று யோசித்து
பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது காலத்தின் கட்டாயம்.

ஆனால் என்ன இன்னல்கள் வந்தாலும்
நான் ஆபத்தில் உள்ளவர்களுக்கு உதவிக்கரம்  நீட்டுவேன்
என்ற உத்தம பிறவிகளும் இந்த உலகில் உண்டு.

அதே நேரத்தில் சுய விளம்பரதிற்க்காக
உதவுவதுபோல் நாடகமாடும்
அரசியல் கட்சி தலைவர்களும்
ஏராளமாக உண்டு.
அவர்கள் போராட்டங்கள் நடத்தி
இதுவரை எந்த பிரச்சினைகளும்
முடிவுக்கு வந்தது கிடையாது
என்பதுதான் உண்மை.

ஏனெறால் எந்த பிரச்சினைகளிலும்
அது ஒரு முடிவுக்கு வரும்வரை
அவர்கள் தொடர்ந்து தங்களை
ஈடுபடுத்திக்கொள்வதில்லை.

மறுநாளே வேறு பிரச்சினைக்கு
அவர்கள் தாவிவிடுவார்கள்.
இதனால் பாதிக்கப்படுவது
அப்பாவி பொதுமக்களும் ,
அந்த கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டு
அடி உதை வாங்கும் அடிமட்ட தொண்டர்களும்தான்.

சரி விஷயத்திற்கு வருவோம்
எத்தனையோ பழமொழிகள்காலபோக்கில் 
சிதைந்து உருமாரியதைப்போல் போல்தான் 
இந்த பழமொழியும் ஆகிவிட்டது.

நம்முடைய மனமாகிய மடத்தில் 
இறைவனுக்கு நாம் இடத்தை கொடுத்தால் 
அவன் நம் அறியாமையாகிய மடத்தனத்தை 
பிடுங்கி எறிந்து நமக்கு ஞானத்தை. 
அளிப்பான் என்பதே அதன் உண்மையான பொருள்

எனவே நம் மனதில் கண்ட கழிசடைகளுக்கு 
இடம்கொடுத்து நம் அழிந்து போகாமால் 
தாள்சடையானுக்கும் நீள் முடியானுக்கும் 
இடம் கொடுப்போம்.
சங்கடங்கள் இல்லாமல் வாழ்வோம். 

Pic.courtesy-google0images 



2 comments:

  1. /// எந்த பிரச்சினைகளிலும் அது ஒரு முடிவுக்கு வரும்வரை, அவர்கள் தொடர்ந்து தங்களை
    ஈடுபடுத்திக்கொள்வதில்லை.... //// உண்மை...

    பழமொழி விளக்கம் அருமை... நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. உண்மையை புரிந்துகொள்ளாமையால்தான் இந்த மக்கள் கூட்டம் அரசியல்வாதிகள், , மதவாதிகள், நடிகனடிகைகள் மாய பேச்சிற்கு மயங்கி அவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து வாழ்நாள் முழுவதும் சிந்திக்கும் திறனிழந்து,மயங்கி கிடக்கிறார்கள்.

      Delete