இறைவா உறங்கியது போதும்
அகிலத்தை காக்கும் அரியே
நீ பாற்கடலில்
அரிதுயில் கொண்டது போதும்
அன்று நீ படைத்த இந்த உலகம்
இன்று எப்படி இருக்கிறது
என்பதை அறியாயோ?
அன்று ஒரு காமுகனாய் விளங்கிய
ஒரு ராவணனை ராமானாய் அவதரித்து
அழித்து விட்டோம் என்று ஆனந்தமாக
உறங்க சென்று விட்டாயோ?
இன்றோ அந்த ராவணன்
கோடிக்கணக்கான
மனிதர்களின் மனதில்அல்லவோ
புகுந்துகொண்டுவிட்டான்
அவன் வேலையை தொடர
எங்கு நோக்கினும் அவனின் ஆட்டம்
ஆட்டம் பாமினை(atombomb) விட
கொடியவிஷமாய் பரவி பெண்களின்
வாழ்வை சூறையாடும் செய்தியை
கண்டும் கேட்டும்அவர்களை அழிக்க
வாராதிருப்பது ஏனோ?
கோயிலில் சிலையாய்
நின்று பூஜைகள்
கண்டுவிட்டால் போதுமா?
அயோக்கியர்களை
அழிக்கும் சம்ஹார
பூஜையை என்று
நிகழ்த்தபோகிறாய்?
ஆனால் நீ மௌனமல்லவோ சாதிக்கிறாய்
உன் தெய்வீக புன்முறுவலுடன்
அதைக்கண்டு என்னைபோன்ற
மென்மனமுடையோர்
உன்னிடம் ஒன்றும்
கேட்காது திரும்பிவிடுகின்றனரே
மற்றவரோ உன்னிடம் பொருளையும்,
புகழையும்.வாழ்வையும்
அல்லவோ யாசிக்கின்றனர்.
நாடு நலம்பெற.
நாட்டுமக்கள் நலம் பெற
உன்னிடம் வேண்டுவோர்
யாருளர் இந்நாட்டில் ?
ராமா நீ உறங்கியது
போதும் விழித்தெழு
புறப்பட்டு இக்கணமே வா
அயோக்கியர்களிடமிருந்து.
அபலைகளையும்
குழந்தைகளையும் காப்பாற்ற
போரில் அன்று
உனக்கு உதவிய வில்லும்
அம்பும் உதவாது
இக்கலியுகத்தில்
சொல்லால்தான்
மாற்றமுடியும்
இக்கலியுக கசடர்களை
வீறு கொண்டு விரைந்துவா
அனுமனையும் அழைத்துக்கொண்டு.
இவனின் பிரார்த்தனை கேட்டு.
ஜெய் ஸ்ரீ ராம
நல்லது நடக்கட்டும்...
ReplyDeleteவருகைக்கு நன்றி.DD
Deleteநல்ல சிந்தனை வரிகள் சொல்லால் மாற்ற முடியுமோ? நம்புவோம்
ReplyDeleteஏன் மாற்ற முடியாது?
Deleteசுயநல அரசியல்வாதிகளும்,
மதவாதிகளும் மக்களை தங்கள்
பொய்யான வாக்குறுதிகளால் கட்டி போட்டு
கொள்ளை அடித்து கொழுத்துக் கொண்டிருக்கிரார்கள்.
அப்படிஇருக்கும்போது
இறைவன் சொல்லும் ஒரு சொல்
இந்த உலகையே தலைகீழாக
திருப்பி போட்டுவிடும்
என்பதில்ஐயம் வரலாமா?