Monday, April 22, 2013
தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (15)
தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள் (15)
எது நற்பதவி?
உன்னிடம்
உண்மையான
பக்தி பூண்டொழுகும்
வாய்ப்பு கிடைப்பதே
நற்பதவியாகும்
எவ்வளவு கற்றும் வேதம்,
சாஸ்திரம் ,உபநிடதங்கள்
முதலியவற்றின் சாரத்தை
தெரிந்து கொள்ளாமலிருப்பது
ஒரு பதவியா?
பொருள் ,மனைவியர்,வீடு
முதலிய செல்வங்களும்
அரச நட்பும் ஒரு பதவியா?
ஆசை உலோபம்
முதலியவற்றுடன் யாகங்கள் செய்து
போகங்களை அடைவது ஒரு பதவியா?
ஜபம், தவம், அணிமா
முதலிய சித்திகள் இவற்றின் மூலம்
உலகை துன்புறுத்தி கூட்டத்தை
சேர்த்துக்கொண்டு
திரிவது ஒரு பதவியா?
தியாகராஜன் உபாசிக்கும்
தெய்வமாகிய ஸ்ரீராமனின் தத்துவத்தை
அறியாமலிருப்பது ஒரு பதவியா?
உன்னிடம் பக்தி பூண்டோழுகுவதே
உண்மையான பதவியாகும்.
(கீர்த்தனம்-பதவி நீ-(206)-ராகம்-சாளக பைரவி -தாளம்-தே-சாதி )
இந்த கீர்த்தனையில் ஸ்ரீராமனை
உண்மையான பக்தி விச்வாசத்துடன்
ஆராதிப்பதே உண்மையான பதவி என்றும்
உலகில் பதவிகள் என்று போற்றப்படும்
மற்றவைகள் எல்லாம் வீணே
என்று ஸ்வாமிகள் கூறுகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
பதவி பற்றிய விளக்கம் அருமை... வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDelete