Monday, April 8, 2013

தியாகராஜசுவாமிகளின் சிந்தனைகள் (5)


தியாகராஜசுவாமிகளின் சிந்தனைகள் (5)



ராமா நான் எவ்வழியை 
பின்பற்றி செல்வேன்  ?



























இதை நீ கூறுவாய் 

செல்வங்களை வழங்குபவனே!

ஆதியும் நடுவும் முடிவும்அற்றவனே!

சீதாதேவியுடன் கூடியிருப்பவனே !

நற்குணங்களின் உறைவிடமே!

'அனைத்தும் நானே' என்ற 
அத்வைத  வழியில் நான் 
செல்ல முயன்றால்
 'உன்னை விட்டுவிடுவது 
எனக்கு பெரிய பாரம் 'என்று கூறுவாய்

'சதா என்னை நீ காப்பாய்'என்று 
நான் முறையிட்டால் 'நீ  துவைத வாதத்தை 
பின்பற்றுபவன்'என்பாய் 

ஆகவே நான் எவ்வழியில் செல்வது? 

தியாகராஜசுவாமி கீர்த்தனை-ஏதா'ரி சஞ்சரிந்துரா -ராகம் ஸ்ரிதிரஞ்சனி-(மே-61)-தாளம் -தே'சாதி' )

3 comments:

  1. படிக்கும் பாக்கியம் பெற்றேன்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  2. அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete