மதுரை மீனாட்சி தாயே
மனம் கனிந்தருள்வாயே
மதுரை மீனாட்சி தாயே
மனம் கனிந்தருள்வாயே..என்ற இந்த
பாடலை பித்துக்குளி முருகதாஸ் பாடி
கேட்டவர்கள் பாக்கியம் செய்தவர்கள்.
அப்படி ஒரு இனிமையான குரல்.
பச்சைமால்
மலை போல் மேனியனின்
பாசமிகு சகோதரி
பச்சை நிறமுடையாள்
தான் படைத்த உயிர்கள் மீது
பச்சாதாபம் உடையாள்
இசைக்கு மயங்கும்
குணமுடையாள்
இசைவாணியே போற்றும்
இனிய குரலுடையாள்
சித்தர்களின் சிந்தையில்
இருத்தி வணங்கும் பேருடையாள்
ஞானி கணபதியை ஞாலம்
காக்க படைத்த பெருமையுடையாள்
சீர்மிகும் சிங்காரவேலனுக்கு
சக்திவேல் தந்த சிறப்புடையாள்
கிளி வடிவில் அவதரித்து
வந்த சுகரின் பாகவதமும்
அருணகிரியின் திருப்புகழும்
தன் தோளில் அமர்த்தி
கேட்டு மகிழும் அன்புடையாள்
உள்ளத்தில் சுந்தரேசனை இருத்தி
அண்டங்களை ஆட்சி செய்யும்
மீனாட்சியே .அடிபணிந்தேன் உன்னை
அனவரதமும் காப்பாய் அனைவரையும்
கண்ணிமைபோல் காலம் முழுதும்.
அருமை ஐயா...
ReplyDeleteநன்றி...
நன்றி...DD
ReplyDelete