இறைவனுக்கு எல்லாம் தெரியும்
பலராமனும் கண்ணனும்
கண்ணன்:அண்ணா ஏன் என் வாயை உன் கைகளால் பொத்துகிறாய்
பலராமன்: நீ அம்மாவிற்கு உன் வாயில் எதையோ காண்பித்தாயாமே
கண்ணன்: நான் ஒன்றும் காட்டவில்லை.அவள் கண்களுக்கு மட்டும் அது தெரிந்தது
பலராமன்: அதை எனக்கும் காட்டவேண்டும்
கண்ணன்: பார்த்து என்ன செய்யப்போகிறாய்.அதை நீ பார்த்து ஒன்றும் ஆகபோவதில்லை.
பலராமன்:இல்லை நான் பார்க்கவேண்டும்
கண்ணன்:அப்போது நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்
பலராமன்: சரி.
கண்ணன்: நீ யார்?
பலராமன்: நான் உன் அண்ணன்.
கண்ணன்: அப்படியாசரி. நீ என்ன
செய்யப்போகிறாய்?
பலராமன்:நான் எப்போதும் உன் பாதுகாப்பாக இருப்பேன். ஏனென்றால் நான் உன்னை விட பலசாலி.)
கண்ணன்: (கண்ணன் மனதிற்குள் நினைத்துக்கொண்டான். அப்படி ஒரு கர்வம் உன் மனதில் இருக்கிறதோ)(பிற்காலத்தில் ஹனுமனை கொண்டு அந்த கர்வத்தை கண்ணன் அடக்கினான்)
(கண்ணன் தன் பக்தர்களின் கர்வத்தை நீக்கி அருள் புரிவதில் சமர்த்தன் .இதற்க்கு. பாகவதத்தில் ஏராளமான சம்பவங்கள் உள்ளன)
பலராமா உனக்கு சமயம் வரும்போது அதைக்காட்டுகிறேன் என்றான்.
பலராமன்: அந்த சமயம் எப்போது வரும்.?
கண்ணன்: அது வரும்வரை பொறுத்திரு.
(ஆனால் அந்த சமயம் கடைசி வரை பலராமனுக்கு வாய்க்கவேயில்லை)
(இறைவன் கொடுப்பதை திருப்தியோடு ஏற்றுக்கொள்ளவேண்டும் இல்லையேல் துன்பப்படத்தான் நேரிடும்.ஏனென்றால் நமக்கு எது தேவை,எது நன்மை பயக்கும் என்பதை நம்மை படைத்த அவனே நன்கு அறிவான்.))
அழகு... அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா...
நன்றி DDsir
Delete