தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள் (23)
க்ரஹ பலம் எம்மாத்திரம்?
ஸ்ரீ இராமனின் அனுக்ரஹ பலமே
உண்மையான பலம்
ஒளிமயமான அவனது
திருவுருவத்தை தியாநிப்பவர்களுக்கு
நவக்ரஹ பலம் எம்மாத்திரம்?
க்ரஹங்களினால் ஏற்படும் பீடைகளையும்
ஐந்து வகை பாபங்களையும் ,
அகந்தை நிரம்பிய காமம் முதலிய
தீக்கு சமமான தீய குணங்களையும்
நாசம் செய்யும் ஸ்ரீ ஹரியைத் துதிக்கும் தியாகராஜனுக்கும் சரசகுணம் படைத்த பக்தர்களுக்கும் க்ரஹ பலம் எம்மாத்திரம்?
(கீர்த்தனை-க்ரஹ பலமேமி-(73)-ராகம்-ரேவகுப்தி-தாளம்-தேசாதி )
இன்று மக்கள் பாவங்கள்
செய்ய பயப்படுவதில்லை
ஆனால் அதன் விளைவால்
ஏற்பட்ட துன்பங்களை மட்டும்
கண்டு அலறுகின்றனர்.
பாவங்கள் செய்ததினால்
விளைந்த வினைகளை
அனுபவித்து தீர்க்காமல்
பரிகாரம் தேடி அலைகின்றனர்.
லட்சக்கணக்கில் பணத்தையும்
நேரத்தையும் விரயம் செய்கின்றனர்.
இது போன்ற மூடர்களை நன்றாக
பயன்படுத்திக்கொண்டு ஜோதிடர்களும்
மாந்திரீகர்களும் கோடி கோடியாய்
காசை அள்ளுகின்றனர்.
கோள்கள் மனிதர்களின்
வினைகளை அனுபவித்து திருந்த
துன்பங்களை இறைவனின்
ஆணைப்படி அளிக்கின்றனர்.
வினைகளை அனுபவித்து
தீர்க்காமல் கோள்களை வணங்கி
வினைகளை தீர்க்குமாறு வேண்டுகின்றனர்.
கோள்களே ஒரு காலத்தில் ராவணனின்
சிம்மாசனத்தின் படிக்கட்டுகளாக அமைந்து
துன்புற்றதும் பின்பு ராவணனை அழித்து
அனைவரையும் ஸ்ரீ ராமன் விடுவித்ததையும்
ராம பக்தர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.
வினைகளை தீர்க்க வல்லவன்
இறைவன் ஒருவனே.
அவனிடம் சரணடைந்தவர்கள்
கோள்களை பற்றி கவலைப்படவேண்டியதில்லை
என ஸ்வாமிகள் அறுதியிட்டு கூறுகிறார்.
/// அனுபவித்து தீர்க்காமல்
ReplyDeleteபரிகாரம் தேடி அலைகின்றனர். ///
100% உண்மை...
உண்மை சுடும்
Delete