Tuesday, April 30, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(32)


தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள்(32)






















இராமா நானும் 
உன்னுடைய மைந்தன்  

என்னை வஞ்சனை செய்யாதே
இராகவா!

நான்கு பேர் மெச்சுவதர்க்காக  
நான் உன்னை நம்பவில்லை
ஸ்ரீராமச்சந்திரா!

வஞ்சகம் நிறைந்த மனிதர்களுடன் 
உறவாடிப் பிறர் மீது பொறாமை கொண்டு திரிந்தேனா?

என் பங்காளிகளுடன் இவ்விஷயத்தில்
 நான் சண்டையிட்டாலும் உன் அடியவன்  
என்ற முறையிலேயே உன்னை வேண்டிக்கொள்ளும் 
என்னை வஞ்சனை செய்யாதே

பெற்றோர்களுடன் வாக்குவாதம் புரியும் சிறுவர்கள் 
"நீ எங்கிருந்து வந்தவன்.நில். உனக்கு புத்தியில்லையா ? என்று பேசியபோதிலும் மிகுந்த பொறுமையுடன்  தாய் தந்தையர் அவர்களை நோக்கி "இவர்கள் நமது மக்கள்"என்று முத்தமிட்டு அணைத்து கொள்வாரல்லவா?

நானும் உனக்கு அப்படிப்பட்ட 
மைந்தன் அல்லவா?
என்னை காத்தருள். 

(கீர்த்தனை-நாயெட -வஞ்சந-(402)-ராகம்-நபோமணி (மேள-40)-தாளம்-ஆதி )

இந்த கீர்த்தனையில் இராம  பக்தர்கள்  பிறர் மெச்சுவதற்காக போலி பக்தி செய்யக்கூடாது என்று கூறுகிறார்.

வஞ்சகம் நிறைந்த மனிதர்களுடன் பழகி மற்றவர்களின் மீது பொறாமை கொண்டு திரியக்கூடாது. 

எப்படி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மரியாதைஇல்லாது  நடந்துகொண்டாலும் அவற்றை கருத்தில் கொள்ளாது அன்பு செலுத்துவரோ அதுபோல் தன்னையும் மைந்தனாக கருதி அருள் செய்ய வேண்டுகிறார் ஸ்வாமிகள்.  

பணிவும், அன்பும், சரணாகதியும் ,நம்பிக்கையும் இல்லாத பக்தி விழலுக்கு இரைத்த நீர்போல் பயனளிக்காது.  வறட்டு பக்தியினால் பயனில்லை. 

2 comments:

  1. /// வறட்டு பக்தியினால் பயனில்லை... ///

    உண்மை ஐயா...

    ReplyDelete
  2. //பணிவும், அன்பும், சரணாகதியும் ,நம்பிக்கையும் இல்லாத பக்தி விழலுக்கு இரைத்த நீர்போல் பயனளிக்காது. வறட்டு பக்தியினால் பயனில்லை. //

    டோட்டல் சரணாகதி வேண்டும் என்பதை வெகு அழகாகச் சொல்லியுள்ளார்கள்

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete