Monday, April 8, 2013

குடந்தை சாரங்கபாணி


குடந்தை சாரங்கபாணி 

குடந்தையிலே 
கோயில் கொண்டுள்ள 
சாரங்கபாணியை 

30 ஆண்டுகளுக்கு 
முன் தரிசித்தேன். 

அப்போதே அந்த அழகு தெய்வத்தை ,
அதன் கம்பீரத்தை,அந்த 
ஆராவமுதனை  விட்டு
பிரிய மனமில்லை. 

என்ன செய்வது ?
ஒரே  நாளில் பல கோயில்களை
பார்த்துவிட்டு இரவு வண்டி
ஏறவேண்டிய நிர்பந்தம்

என்னுள்ளே புகுந்து கொண்ட
அவன் அவ்வப்போது 
என் நினைவில் வருவான். 

அவனை வரையவேண்டும் 
என்று எனக்கு கொள்ளை ஆசை.

ஆனால் அது அவ்வளவு 
சுலபமில்லை 
ஏனென்றால் 
அவனே அழகன். 
அவன் திருமேனி மேல் 
சாற்றியிருக்கும் திருவாபரணங்களை 
வரைவதற்க்கே
பல நாட்கள் பிடிக்கும் 

எத்தனையோ முறை
முயற்சி செய்து விட்டுவிட்டேன்.

இத்தனை ஆண்டுகள் கழித்து 
மீண்டும் முயற்சித்தேன். 
இந்த முறை என் மீது 
கருணை செய்தான். 

அந்த படம் இதோ.




2 comments:

  1. என்ன சொல்வதென்றே தெரியவில்லை... அவ்வளவு நுணுக்கம்...!

    அற்புதம்...

    /// என்னுள்ளே புகுந்து கொண்ட
    அவன் அவ்வப்போது
    என் நினைவில் வருவான். /// உண்மை...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நான் பெற்ற இன்பம்
      பெருக இவ்வையகம்

      Delete