Tuesday, April 9, 2013
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்
மாதவன்தான்
ஆதவனாய்
ஒளி வீசுகின்றான்
அவன் ராமனாய்
இப்புவியில் அவதரித்தபோது
ராவணனை அழிக்க
சூரிய பகவானை துதித்து
சக்தி பெற உதவும் ஆதித்ய ஹ்ருதயம்
என்னும் ஸ்தோத்திரத்தை
அகத்தியபெருமான் நமக்காக
தந்தருளினார் .
மிகவும் சக்தி வாய்ந்த துதி இது .
இதை தினமும் பாராயணம் செய்பவர்கள்
நோயில்லா உடலும்,
பகைவரில்லா வாழ்வும் பெற்று
ஆனந்தமாக வெற்றியுடன் வாழ்வார்
என்பது அனுபவ உண்மை
ஆயிரம்கரங்கள் நீட்டி என்ற கர்ணன்
படம் பாடல் சூரியனின் புகழ் பாடும் பாடல்
அனைவருக்கும் தெரியும்
செங்கதிர் தேவன் ஒளியினை தேர்கின்றோம்
அவன் எங்கள் அறிவினை தூண்டி நடத்துக
என்ற மங்களம் வாய்ந்ததோர் சுருதி மொழி
என்று காயத்ரி மந்திரத்தை
அழகிய தமிழில் மொழி பெயர்த்தான் பாரதி.
ஆதவன் இல்லாவிடில்
இப்புவியில் உயிர்கள் எது ?
ஒளி எது?சக்தி எது?
நம்முடைய ஆன்மகாரகனாக
விளங்கும் ஆதவனை
கண் முன்னே தோன்றும்
கடவுளை அனுதினமும்
போற்றுவோம்.வணங்குவோம்
வளமான வாழ்வு பெறுவோம்.
இவன் வரைந்த ஆதவனின் படம் இதோ.
Subscribe to:
Post Comments (Atom)
அசத்துறீங்க ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி DDsir
Delete