புது அக்ரஹார பட்டாபிராமனுக்கு
முத்துச்வாமி தீஷிதர் செய்த
மகுடாபிஷேகம்.
சங்கீத மும்மணிகள் தியாகராஜர்
சியாமா சாஸ்திரி
முத்துச்வாமி தீஷிதர்
ஆகிய மூவரும் ஒருவரை
ஒருவர் சந்தித்திருப்பதர்க்கு
சான்றுகள் உள்ளன
சியாமா சாஸ்திரிகள்
தன் புதல்வன் சுப்பராய சாஸ்திரிகளை
சங்கீதம் கற்றுக்கொள்ள
தியாகராஜரிடம் அனுப்பினார்
சியாமா சாஸ்திரிகளின்
ஆனந்த பைரவியில் மயங்கிய
தியாக பிரம்மம்,
அவரிடம் உள்ள மரியாதையின்
காரணமாக ஆனந்த பைரவியில்
இனி கீர்த்தனம் எதுவும்
செய்ய மாட்டேன்
என்று முடிவெடுத்தாராம்
அந்த ராகத்தில்
அவர் பாடிய கீர்த்தனைகள்
மூன்று மட்டுமே
முத்துச்வாமி தீஷிதரோ தஞ்சைக்கு
அடிக்கடி வந்து மேலவீதியில்
தற்போதுள்ள சங்கர மடத்தில் தங்கியவர்
பிற்காலத்தில் திருவாங்கூர்
மன்னர் சபையை அலங்கரித்த
'தஞ்சை நால்வர்'என்ற
இளைஞர்களுக்கு சங்கீதம்
சொல்லி கொடுத்தவர்
அப்போது அவர்
தியாகராஜரையும் நிச்சயம்
சந்தித்திருப்பார்.
இது ஒரு புறமிருக்க புது அக்ரஹாரத்தின்
உண்மை பெயர் 'புத அக்ரஹாரம்'
(கல்விமான்கள் நிறைந்த அக்ரஹாரம் )
என்று கூறுவோரும் உளர்
தியாகராஜ சுவாமிகள்
இங்கு அடிக்கடி வந்து பட்டாபிராமனை
தரிசிப்பது வழக்கம்.
ஒரு சமயம் தன்னை பார்க்க
வந்த தீஷிதரை அழைத்து வந்து
இந்த ராமன் மீது ஒரு கீர்த்தனை
பாட சொன்னாராம் தியாக பிரம்மம்
அப்பொழுது எழுந்ததுதான்
மணிரங்கு ராகத்தில் அமைத்த
'மாமவ பட்டாபிராம'என்ற
அற்புதமான கிருதி .
இந்த கீர்த்தனத்தில்
அனுமனால் பாடப்பட்டு பரத லக்ஷ்மண
சத்ருகன,விபீஷண ,சுக்ரீவ பிரமுகர்களால்
சேவிக்கப்பட்டு அத்ரி, வசிஷ்ட முனிவர்களால்
அனுக்ரஹிக்கப்பட்டு ,நவரத்ன மண்டபத்தில்
மணிகள் பூண்ட சிம்மாசனத்தில்
சீதா சமேதராய் ராம பிரான்
கொலுவிருக்கும் பட்டாபிஷேக காட்சியை
நம் கண் முன் கொண்டு வருகிறார் தீஷிதர் .
வால்மீகி தன் சுலோகங்களால்
ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்தார்.
தீஷிதரோ இந்த பாடலால்
புது அக்ரஹாரத்தில்
எழுந்தருளியுள்ள பட்டாபிராமனுக்கு
மகுடாபிஷேகம் செய்துவிட்டார்.
(மூல தகவல்கள்-தினமணி-வெள்ளிமணி-4-4-2003)
சிறப்பான தகவலுக்கு நன்றி ஐயா....
ReplyDeleteநன்றிDD sir
Deleteஅறியாதன அறிந்து மகிழ்தேன்
ReplyDeleteமனமார்ந்த நன்றி
நன்றி திரு ரமணி அவர்களே.
Deleteஉங்களை நெடு நாட்களாக
என் வலைப்பக்கம். காணவில்லை
நீங்கள் வந்தால் எனக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி.
ஏனென்றால் உங்கள் பெயரிலேயே
ராம நாமம் உள்ளது.
நீங்களே ராமர்.
எப்படி என்றால் Rama-(ராம) (ni)(நீ )