மதுரையின் ஜோதி
மிட்டாயி மிட்டாயி
ராம நாம மிட்டாயி
எட்டாள் பலம் கொடுக்கும்
பட்டாபிராம மிட்டாயி
என்ற இந்த பாட்டை பாடியவர் யார்?
உங்களுக்கு தெரியுமா?
அவர்தான் மதுரையின் ஜோதி
என்று போற்றப்பட்டவரும்
எப்போதும் இறைவனின் நாம
ஸ்மரணையிலே மூழ்கி
ராமகிருஷ்ண பக்தியை
பரப்பிய மகான்
ஸ்ரீ நடன கோபால நாயகி ஸ்வாமிகள்.
அவர் 97 ஆண்டுகளுக்கு முன்
வைகுண்ட ஏகாதசி திதியன்று
இறைவனுடன் கலந்துவிட்டது
அவரின் விஷ்ணு பக்திக்கு சான்று.
அவர் தன் தாய் மொழியான
சௌராஷ்டிரா மொழியில் எளிய
பொருள் பொதிந்த பக்தி சுவை ததும்பும்
கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.
அதுபோல் தமிழிலும் இயற்றியுள்ளார்.
ஒரு பழைய புத்தக கடையில்
1969 ஆம் ஆண்டு அவரை பற்றி
வெளியிடப்பட்ட ஒரு நூல் கிடைத்தது.
அதை இத்தனை ஆண்டுகளுக்கு
பிறகு பார்த்தேன்.
அவரை பற்றி அந்த நூலில் உள்ள
சில தகவல்களை வலை நண்பர்களிடம்
பகிர்ந்துகொள்ளலாம் என்று இருக்கிறேன்.
பகிர்ந்து கொள்ளுங்கள் ஐயா...
ReplyDeleteஎங்களின் முன்னோர் மதுரையின் ஜோதி...
அடியேனும் 'பட்டு' நூல்காரன்... வாழ்விலும் 'பட்டு பட்டு' நூலாகி (Textile Technology) படித்தவன்...
பாடு பட்டால்தான்
Deleteபலன் உண்டு
துன்பப் பட்டால்தான்
இன்பம் என்ன
என்று தெரியவரும்
மல்பரி இலைகளுக்கு ஆசைப்பட்டு
பட்டுப்புழு அடையும் இன்னல்களும்
அதை தொடர்ந்து அதன் மரணத்தை கண்டு
உலக இன்பங்களுக்கு ஆசைப்பட்டு
துன்பத்தில் உழலும் மனிதர்கள்
பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்
ஆனால் பகட்டுக்காக
பளபளக்கும் பட்டையே
நாடுகிறார்கள் மனிதர்கள்.
அதனால் அவர்கள் துன்பம்
என்றும் நீங்குவதில்லை