குழப்பங்கள் தேவைதானோ
சொல் மனமே ?
கருணைக்கடலாம் ராமபிரான்
இருக்கையிலே உனக்கு பிறவி
பெருங்கடலை பற்றிய பயம்
தேவைதானோ சொல் மனமே
அருவிபோல் அவனருள்
கொட்டுகையிலே அனாவசிய
சஞ்சலங்களில் உன் மனம் சிக்கி
தவிப்பது முறையோ சொல் மனமே
உள்ளத்தில் உறையும் ஈசனை
நம்புவதை விடுத்தது ஒன்றுமறியாத
மூடர்களின் உளறல்களை கேட்டு
உள்ளம் நடுங்கலாமோ சொல் மனமே
பக்தர்களின் உள்ளத்தில் குடிகொள்ளும்
பரந்தாமன் புகழ் பாடுவதை விடுத்தது
பாதகர்களோடு உறவு கொண்டு
பாதக செயல்களை செய்து பாவக்குழியில்
விழுவது தகுமோ சொல் மனமே
இறைவனை உணர்ந்த சத்குருவின்
பாதங்களை பற்றி அவனருள்
பெறுவதை விடுத்து இறைவன் இல்லை
என்று இரைச்சல்கள் போடும்
பொய்யர்களை நம்பி
மோசம் போகலாமோ சொல் மனமே
அனைத்துயிரிலும் அவனைக்கண்டு
அன்பு செய்து வாழ்வார் தமக்கு
அவனருள் எளிதில் கிட்டிடும்
என்பதை அறிந்து உய்வாய் மனமே
குழப்பங்கள் தீர குருதேவர்
சிவானந்தரின் வழிகாட்டுதல்
இருக்கையிலே கவலைகள்
நம்மை என்றும் அண்டாது
என்று நம்பிக்கை கொள்வாய் மனமே .
பாடலாக பாடிப் பார்த்தேன்... அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா...
நன்றி DD
Delete