சின்னஞ்சிறு பெண்போலே
சின்னஞ்சிறு பெண்போலே
சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே
ஸ்ரீ துர்க்கை வீற்றிருப்பாள்
பெண்ணவளின்
கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக
வேறொன்றும் கிடையாது
மின்னலைப்போல்
மேனி அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள்
எண்ணமெல்லாம் நிறைவாள்.
பின்னல்ஜடை போட்டு
பிச்சி பூ சூடிடுவாள்
பித்தனுக்குஇணையாக
நர்த்தனம் ஆடிடுவாள்.
இந்த பாட்டை சீர்காழி கோவிந்தராஜன்
அவர்கள் பாடி கேட்க வேண்டும்
அதுபோதும் தெய்வீக இன்பம் தானாகவே
சித்திக்கும்.
கணீர் குரலில் அற்புதமாக இருக்கும்...
ReplyDeleteபடமும் உங்களின் கைவண்ணத்திற்கும் பாராட்டுக்கள் ஐயா... வாழ்த்துக்கள் பல...
நன்றி DDsir
Deleteஉண்மைதான் அருமை குளத்தின் நடுவே துர்க்கையவள் குளிர்ந்திட்டாளோ
ReplyDelete