Wednesday, April 24, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (19)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள் (19)























இராமபிரானின் பஜனையில் 
ஆழ்ந்திருப்போருக்கு
யமபயம் எதற்கு?

பிரம்மன், உருத்திரன்,
தேவேந்திரன் ஆகியோருக்கு 
அவரவரின் பதவியை அளிக்கும்
இராமபிரானின் பஜனையில் 
ஆழ்ந்திருப்போருக்கு
யமபயம் எதற்கு?

அண்டகோடிகளில் 
நிறைந்திருக்கும் கோதண்டபாணியாகிய
இராமனின் திருமுகமண்டலத்தை 
இதயத்  தாமரையில் என்றும் 
தரிசித்துப் பூஜை செய்து 
அளவற்ற பக்தியுடன் 
மனங்கரையும்
பற்றற்ற துறவிகளுக்கும் 
கஜேந்திரனைக் காத்த
பகவானின் தாசனாகிய 
தியாகராஜன் புரியும் 
நாம சங்கீர்த்தனத்தில்
ஈடுபடுபவர்களுக்கும் 
யமபயம் ஏது?

(கீர்த்தனை(305)-பஜன பருல-கேலதண்ட -ராகம்-சூரடி-தாளம்-ரூபகம்)

இந்த கீர்த்தனையில் ராம நாம பஜனையில் 
ஈடுபட்டிருப்பவனுக்குயமபயம்  இல்லை
என்கிறார் ஸ்வாமிகள். 

இதன் பொருள் என்னவென்றால் 
ராம பஜனையில் மெய்மறந்து
ஈடுபட்டிருப்பவனுக்கு 
தான் என்றஎண்ணம் 
மறைந்துவிடுவதால்
யமனுக்கு அங்கு 
வேலையில்லாமல் போகிறது 
என்று பொருள்.   

அத்தகைய தூய பக்தியை 
நமக்கு இராமபிரான் அருளுவாராக 

2 comments: