Wednesday, April 10, 2013

கணபதியே கணபதியே



கணபதியே  கணபதியே 





















கணபதியே  கணபதியே 
வழிபடும்  பக்தர்களை 
கண்மணிபோல்  
காக்கும்  குனநிதியே 

வெள்ளி  கவசம்  சாற்றினாலும் 
வெள்ளெருக்கம்பூ  மாலை 
அணிவித்தாலும் 
வேறுபாடில்லாமல்  
அனைவருக்கும்  வேண்டும் 
 வரங்களை அள்ளி  தரும் 
 கற்பகதருவே  

கல்லில்  உருவம்  சமைத்தாலும் 
மண்ணால்  உருவம்  அமைத்தாலும்  
மங்கள  வாழ்வை  மானிடர்க்கு  
அளிக்கும்  அருள்நிதியே  ;

மாடக்கோயிலில்   அமைந்தாலும்  
மரத்தடியில்  அமர்ந்தாலும்  வழிபடுவோர்க்கு 
மகிழ்வோடு  அருள்  செய்யும்  கணபதியே  

நம்பிக்கையோடு  வழிபடும்  
அனைவருக்கும்  தும்பிக்கையை  தூக்கி  
ஆசீர்வதிக்கும்  வக்ரதுண்டனெ  

பார்வையாலே  வணங்கினாலும் 
நிலத்தில்  வீழ்ந்து   வணங்கினாலும்  
தவறென  கொள்ளாது  
நன்மைஅருளும்  விநாயகனே

கணேசா  சரணம்  
சரணம்  சரணம்  


2 comments:

  1. அருமை...

    கடைசி நாலு வரிகளும் உண்மை...

    ReplyDelete
    Replies
    1. விநாயகர் படம் எப்படி உள்ளது.
      ஒரு மணி நேரத்தில்
      இன்றுதான் பதிவுக்காக வரைந்தேன்

      Delete