தியாகராஜசுவாமிகளின் சிந்தனைகள் (4)
ராமா நீ யார் ?
இந்த கேள்வியை
தியாகராஜசுவாமி கேட்கிறார்
எவரநீ என்ற கீர்த்தனையில்
(பாடல்143-ராகம் தேவாம்ருத வர்ஷணி
(மே-22)- தாளம்-தே 'சாதி '
நரஸ்ரேஷ்டர்கள்
உன்னை யாரென்று
நிர்ணயித்தனர் ?
எவ்வாறு ஆராதித்தனர்?
சிவன் என்றா?
விஷ்ணு என்றா ?
பிரம்மன் என்றா?
பரப்ரம்மம் என்றா?
(யாரென்று நிர்ணயித்து பூஜை செய்தனர்?)
சிவ மந்திரமாகிய 'நமசிவாய 'என்பதில்
'ம'என்னும் எழுத்தே உயிர்.
விஷ்ணு மந்திரமாகிய 'ஓம் நமோ நாராயணாய '
என்பதில் 'ரா' என்ற எழுத்தே உயிர்.
.
இவ்விவரங்களை அறிந்த
பெரியோர்களை நான் வணங்குகிறேன்.
அது அவர் பிரார்த்தனை.
அதை அந்த ராமன்
ஏற்றுக்கொண்டான்.
ஆட்கொண்டான்.
இது இவன் பிரார்த்தனை.
உதார குணமுடைய ராமா
உன்னை உதட்டளவில் பூஜிக்காது
உள்ளத்திலே வைத்து பூஜிக்கின்றேன்
என் நினைவு தெரிந்த நாள் முதற்கொண்டு.
என் மீது கருணை காட்டு.
அவனை நினைத்து வரைந்தேன்
அவன் திருஉருவம் அது இதோ.
விளக்கமும் படமும் மிகவும் அருமை ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
தின்ன தின்ன
Deleteஎண்ண எண்ண
திகட்டாத அந்த
சுவையை அனுபவத்தில்
தெரிந்தும் கொள்ளுங்கள்