Wednesday, April 24, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (21)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள் (21)























ஸ்ரீ ராமா நீ என்னை ஆட்கொள்வாயோ,
கொள்ளமாட்டாயோ
நானறியேன்!

இராமா நீ என்னை ஆட்கொள்வாயோ 
கொள்ளமாட்டாயோ!

முன்பு நாங்கள் நோற்ற 
நோன்புகளின் பயன் எத்தகையதோ?

மனதில் உன் மீது பக்தி மிகுந்து உன்னையே
நம்பினோமென்று  கூறித் திரிந்தோமே தவிர 
அதை உண்மையென்று கருதி நீ என்னை ஆட்கொள்வாயோ,கொள்ளமாட்டாயோ?

சம்சாரக் கடலில் தோன்றும் இன்னல்கள் 
எங்களை அணுகாமலிருப்பதும் 
விவேகமற்ற மாந்தர்களின் நட்பை நாங்கள் 
விரும்பாமல் விலகியிருப்பதும் ,இவ்வுலகில் வேதம்,ஆகமம்,முதலியவற்றின்
 மர்மங்களை தெரிந்து நாங்கள்
 உன்னை நம்பியிருப்பதும் 
போதுமென்றெண்ணி நீ என்னை 
ஆட்கொள்வாயோ,கொள்ளமாட்டாயோ? 

கார்முகில்வண்ணனே!

நியமம் தவறாமல் வாழும் பக்தர்களுக்கு
நிலையான சுகம் உண்டென்று
உரைக்கும் பெரியோர்களை நம்பி,அழகு ததும்பும் 
உன் வடிவத்தை ஆனந்தத்துடன் தியானித்துக்கொண்டு 
அனவரதமும் உன்னைப் போற்றினோம்,
பூர்ணச்சந்திர  வதனனே !

உன் ஜெபமே எங்களுக்கு கதியாததால் 
தாமரைக்கண்ணனே !

குதிரை,யானை,செல்வம் முதலியன பெரிதல்ல 
சீதையின்  உள்ளம் கவ்ர்வோனே!
சாதி மலரை அணிந்தவனே .
என் பிழைகளை பொருட்படுத்தாமல் 
என்னை ஆட்கொள்வாயோ,கொள்ளமாட்டாயோ?

(கீர்த்தனம்-ராம நீ -வாது-கொந்து (442)-ராகம்-கல்யாணி-தாளம்-ஆதி )

மிக அருமையான கீர்த்தனை.
நம்மை நாமே ஆத்ம பரிசோதனை செய்யும் கீர்த்தனை.

நாம் உண்மையாக நோன்புகளை நோற்றிருந்தால்
உண்மையான பக்தி பண்ணியிருந்தால் 
நம்முடைய நோக்கம் எப்போதோ நிறைவேறி இருக்கும்.

அதனால்தான் உலக மோகங்களை தவிர்த்து 
உண்மையான பக்தி ராமனின் திருவடிகளில் 
கொள்ளவேண்டும் என்பது 
இந்த கீர்த்தனையின் நோக்கம் ஆகும்.  

3 comments:

  1. சிறு சந்தேகம் : சம்சாரக் கடல் என்றால் இன்னல்கள் தோன்றுமா...?

    ReplyDelete
    Replies
    1. கேள்வி:சம்சாரக்கடல் என்றால்
      இன்னல்கள் தோன்றுமா?

      பதில்: இன்னல்கள் தோன்றாது.
      இன்னல்கள்தான் நிறைந்திருக்கும்.
      அதிலிருந்து மீளுவதற்கு
      பிரத்தியேகமான அறிவு வேண்டும்.
      எப்படி பெருங்கடலில்
      கப்பலில் பயணம் செய்ய
      பயிற்சி பெற்ற மாலுமி தேவையோ
      அதுபோலத்தான்.

      கேள்வி" எப்படி பயிற்சி பெறுவது?

      பதில்:கடலில் மூழ்கினால்
      உயிர் போய்விடும்.
      ஆனால் கடலில் நீந்தினால்
      உயிர் பிழைக்கலாம். இல்லை
      படகில் ,கப்பலில் சென்றால்
      கடலை கடக்கலாம்.

      அனால் எப்படி இருந்தாலும்
      நம்மை விழுங்க ஏராளமான
      ஆபத்துக்கள் காத்திருக்கின்றன

      அதனால்தான் நாம் ஞானிகளையோ
      அல்லதுஇறைவனையோ நாடி
      நம்மை காப்பாற்றி கொள்ள வேண்டியுள்ளது. .

      Delete
  2. விளக்கத்திற்கு நன்றி ஐயா...

    ReplyDelete