Monday, April 22, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(17)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(17)


மனதிற்கு உபதேசம்

























மனமே! 
அவன் ஒரு சொல் 
ஒரு கணை
ஒரு பத்தினி 
இவற்றை நியமமாக உடையவன் 
கலங்காத ஒரே சித்தத்தை உடையவன்
அவனை ஒரு நாளும் மறவாதே
நீண்ட ஆயுள் இந்திரபோகம்
ஆகியவற்றை அளிப்பவன் 
இவ்வுலகில் நடமாடும் தெய்வம்
தியாகராஜன் வணங்கும் மூர்த்தி. 

(கீர்த்தனை-ஒகமாட -(232)-ராகம்
ஹரிகாம்போஜி-தாளம்-ரூபகம் )

மனதில் தோன்றும் எண்ணம்தான் 
செயலாக வடிவெடுக்கிறது.

எனவே நல்ல செயல்கள் செய்யவேண்டும்
என்றால் நல்ல எண்ணங்கள் 
மனதில் உதிக்கவேண்டும். 

அதனால்தான் மனதிற்கு 
ஸ்ரீராமனின் கல்யாண குணங்களை பற்றி 
ஸ்வாமிகள் வலியுறுத்துகிறார். 

இதைதான் தமிழில் ராமபிரானை பற்றி 
விவரிக்கும்போது ஒரு சொல்.
ஒரு வில். ஒரு இல் . என்று வர்ணிப்பர். 

2 comments: