Saturday, April 13, 2013

அனைவரும் நலமுடன் வாழவேண்டும் என்ற சிந்தனை ஓங்கட்டும்



அனைவரும்  நலமுடன் வாழவேண்டும் 
என்ற சிந்தனை ஓங்கட்டும்

























நீரில்லா நெற்றி பாழ் 
என்று ஒரு வசனம் உள்ளது 

எல்லோரும் நெற்றியில் ஒரு சின்னத்தை 
அதாவது அவர்கள் வழிபடும் 
கடவுளை நினவு படுத்தும் வகையில் 
சின்னங்களை அணிந்திருத்தல் வேண்டும்
 என்று பொருள் கூறுகிறார்கள். 

சில மதத்தினர் அதற்காக 
சில குறியீடுகளையும், ஆடை 
அலங்காரங்களையும் வைத்திருக்கிறார்கள். 

அவர்களைத்தான் உயர்ந்தவர்கள் 
என்று இந்த உலகம் நினைக்கிறது.


இறைவன் அன்பு மயமானவன். 
எல்லா உயிரிலும் அந்தராத்மாவாக இருப்பவன். 
ஆனால் அதை புறம் தள்ளிவிட்டு 
புறசின்னங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து 
சண்டையிட்டு மடிகின்றனர். 

ஆனால் எந்த மதத்தை சேர்ந்தவராயினும் 
உள்ளத்தில் ஈரம் இருக்கவேண்டும், 
துன்பப்படுபவர் மீது இரக்கம் இருக்கவேண்டும்
எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்தவேண்டும் 
,யாருக்கும் மனத்தால் கூட 
தீங்கு நினைதல் கூடாது என்ற 
உண்மை கோட்பாடுகளை 
காற்றில் பறக்கவிட்டுவிட்டனர். 

நீரில்லா நெற்றி( இதயத்தில் ஈரம்,இக்கம்,அன்பு) 
இல்லாத நெறி (வழி,மதம்,மார்க்கம்) 
பாழ் (வீணே) என்பதே 
அதன் உண்மை பொருளாக இருக்கமுடியும். 

இந்த உலகில் புறசின்னங்களுக்கு 
கொடுக்கும் முக்கியத்வம் அகத்திலே 
இதயத்திலே வெளிப்படுமானால் 
அங்குதான் இறைவன் வெளிப்படுவான்.
 அதுதான் உண்மையான நெறி. 

ஆனால் சொல்வதை செயலில் 
காட்டி வாழ்பவர்களைத்தான்
 இறைவன் ஆட்கொள்கின்றான்

அதே சமயத்தில் தவறு செய்பவர்களையும் 
திருத்தி தடுத்தாட்கொள்வதும்  
அவன் கருணையே. . 

அந்த கருணாமூர்த்தியான
 பகவானை வணங்குவோம்.
அவனை எப்போதும் மனதில் நினைந்துகொண்டே 
இவ்வுலக கடமைகளை ஆற்றுவோம். 

எல்லோர் மனதிலும் 
நல்ல சிந்தனைகள் உதிக்கட்டும். 
உள்ளத்தில் கள்ளம் அகலட்டும்

தானும் இன்புற்று பிறரையும் 
இன்புற செய்யும் உத்தம பண்பு வளரட்டும் 

பிறரை  நிந்தனை  செய்யும்  போக்கு  
நீங்கி  அனைவரும்  நலமுடன் வாழவேண்டும் 
என்ற சிந்தனை ஓங்கட்டும்

குறைகளையே நினைந்து 
மனம் குமையாமல்
குறையின்றுமில்லா 
கோவிந்தனில் திருவடிகளை
மனம் நாடி அமைதியடையட்டும்.

அவனருளால் விஜய புத்தாண்டு 
அனைவருக்கும் 
 நலமாக,வளமாக விளங்கட்டும். 

3 comments:

  1. கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று எல்லோரும் வளமுடன் வாழ, இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அனைத்து செல்வங்களுக்கும்
      அடிப்படை நல்லொழுக்கம் .
      அது இன்று இல்லை.

      அது இருந்தால்தான்
      அதனுடன்15ம். இருக்கும்.

      அது தனக்கும்
      பிறருக்கும் பயன்படும்
      அதை இறைவன்
      அனைவருக்கும் தருவானாக.

      Delete
  2. நீரில்லா நெற்றி பாழ்
    என்று ஒரு வசனம் உள்ளது //நல்ல விளக்கமும் குழப்பமும் தீர்த்தமைக்கு நன்றி

    ReplyDelete