Saturday, April 13, 2013

தியாகராஜசுவாமிகளின் சிந்தனைகள் (10)


தியாகராஜசுவாமிகளின் சிந்தனைகள் (10)






உனது தயை கிடைப்பதே பாக்கியமென்று 
உண்மையில் மாந்தருக்கு 
ஏன் தோன்றவில்லையோ?










நாதரூபனே!மேகவண்ணனே!
சூரிய குலத்தின் பூஷணமே  !
இனிய சொற்களை பேசுபவனே !

விவேகமற்ற பெண்டிர்,மக்கள் 
முதலியோருடன் தினந்தோறும் கூடி  
சம்சாரக் கடலை நீந்த முடியாமல் பயத்தினால் 
கை களைத்து ஆள்பவர்களை அண்டியும் 
சுகம் கிடைக்காமல் ஆயாசமடைந்து 
உன் மாயையால் வரும் அவஸ்தைகள் 
இவைஎன அறிந்தும் 
(உனது தயை கிடைப்பதே பாக்கியமென்று 
உண்மையில் மாந்தருக்கு 
ஏன் தோன்றவில்லையோ?)

உறங்கி எழுந்ததும் உலோபிகளான மாந்தர்கள்
 பின் திரிந்து நோயுற்றும் தாம் விரும்பியது 
கிடைக்காமல் உடல் இளைத்து போக 
அற்ப பொருட்களுக்காக அசுரர்களை போன்றவர்களையும் ப்ராம்மணர்களையும் தேடி திரிந்து ஒரு சுகமும் பெறாமல்அதிர்ஷ்டம்இவ்வளவுதான் 
என்று மனதில் அறிந்தும் 
(உனது தயை கிடைப்பதே பாக்கியமென்று 
உண்மையில் மாந்தருக்கு ஏன் தோன்றவில்லையோ?

பாம்பனை பள்ளியானே !
சூரிய சந்திரரை கண்களாக உடையவனே !
சீதையை மடியில் அமர்த்தியவனே!
யோகிகள் வணங்கும் பாதனே !
உலகின் சரணே !களங்கமற்றவனே!
ஆசை,கருமித்தனம் ,மதம், முதலியவற்றை 
ஒழித்து காப்பாற்றும் விருதுடையவனே
 ரகுநாயகா ஐயமின்றி காக்கும் தெய்வமே.

(கீர்த்தனம்-நீ-தய(139)-ராகம்-ரீதிகௌள-தாளம்-ஆதி)


இறைவனின் கல்யாண குணங்களை
 பலவிதமாக வர்ணிக்கும் ஸ்வாமிகள் 
,இந்த உலகில் மனிதர்கள் அனுபவிக்கும் 
துன்பங்களை பட்டியலிடுகிறார்.

அந்த துன்பங்களிலிருந்து விடுபட
 இறைவன் தயை இருந்தும் 
அவர்கள் அதனை பெரிதாக கருதுவதில்லை. 
மீண்டும் துன்பத்தில் சிக்குண்டு தவிப்பதையே 
இயல்பாக கொண்டுள்ளனரே என்று 
ஆதங்கப்படுகிறார் 


1 comment:

  1. சிந்தனைகளின் விளக்கம் அருமை... நன்றி ஐயா...

    ReplyDelete