தியாகராஜசுவாமிகளின் சிந்தனைகள்.(14)
ராம பக்தர்களே சிந்தியுங்கள்
எத்தனை காலம்
நான் இவ்வாறு திரிவது?
எண்ணற்ற ஜன்மங்கலெடுத்து
சம்சாரமென்னும்
இக்காட்டில் திருடர்களைப்போல்
பிறரை விரட்டியடித்து
எத்தனை காலம்தான் திரிவது?
உப்பு முதல் கற்பூரம் வரை
யாசகத்தினால் சம்பாதித்து
வீண் பெருமைக்காக வயிறு நிரப்பி
"நாமே உயர்ந்தவர்கள்"என்று
சுய தம்பட்டம் அடித்துக்கொண்டு
எத்தனை காலம்தான் திரிவது?
நாளைக்கு சோறில்லை
என்று இரவு பகலாக கவலையுற்று
பகவானின் பூஜையை மறந்து அதை
செய்ததுபோல்பிறர் முன்
நடித்து எத்தனை காலம்தான் திரிவது?
அயல் வீட்டுக்காரர்கள்
இவன் பண்டிதன் என்று பிரமித்து
விருந்துக்கு அழைக்க
"எல்லாம் சித்தமாக இருக்கட்டும் "
என்று கூறி போலியாக மாலை வரையில்
பூஜை ஜபம் முதலியன செய்து
எத்தனை காலம் திரிவது?
என்னிடமுள்ள பிழைகளை
நானே தெரிந்துகொண்டும்
அவற்றை அடியோடு விடமுடியாமல்
நான் எத்தனை காலம் திரிவது
மஹானுபாவனே ஸ்ரீ ராமா
(கீர்த்தனம்-என்நாள்ளு திரிகே தி -(196)-ராகம்-மாளவஸ்ரீ -தாளம்-ஆதி )
இந்த வருடம் ஸ்ரீ ராமநவமியன்று
ராம பக்தர்கள் தங்களை சுய பரிசோதனை
செய்துகொள்ளவேண்டும்.
இன்று அனைவரும் தகுதியற்றவர்களை
தகுதி படைத்தவர்களாக கருதி அவர்களுக்கு
பிழைக்கவழி செய்து கொண்டு இருக்கிறோம்.
இந்த செயலால் நமக்கு
உண்மையில் எந்தபயனும். இல்லை.
பிறவிதோறும் மலைபோல்
துன்பங்களை அனுபவித்தும்
கடுகு போன்ற அற்ப இன்பங்களுக்காக
ஆசைப்பட்டு மீண்டும் மீண்டும்
பிறவி துன்பத்தில் சிக்கிகொள்கிறோம்
சுவாமிகளின் இந்த வரிகளை
நம் மனதில் கொள்வோமானால்
இந்த மாளாபிறவிக்கு ஒரு முடிவு ஏற்ப்படும்.
ஸ்வாமிகள் குறிப்பிடுவதைப்போல்
தள்ளுபடிகளுக்காகவும்,இலவசங்களுக்காகவும்
இன்று மக்கள் முண்டிஅடித்துகொண்டு அலைவது
இதுபோலத்தான்
பிழைகளை நன்கு அறிந்தும்
அதை விடமுடியாமல் நம்முடைய
மனம் சக்தியற்று கிடக்கிறது.
செய்யும் பூஜைகளில்
மனம் முழுவதுமாக ஒன்றி
ஈடுபட மறுக்கிறது.
அதுவும் விளம்பரதிற்க்காக
பல லட்சக்கணக்கில் செலவு செய்து
பூஜைகள் வணிக நோக்கத்தில் நடக்கிறது.
இவைகளினால் எந்த பயனும் இல்லை.
ஒவ்வொரு ஜீவாத்மாவும்
தனியாகத்தான் இறைவனை நாடவேண்டும்
நாடி விடுதலை பெறவேண்டும்.
அதற்க்கு ஒரே வழி எந்த பலனையும்
எதிர்பாராமல். ராமநாமத்தை
உச்சரித்துக்கொண்டே இருப்பதுதான் . .
இன்றைக்கும் நடக்கும் உண்மைகள்..
ReplyDeleteவிளக்கத்திற்கு நன்றி ஐயா...